கீராதான் வேணும்-அடம்பிடிக்கும் ஹீரோக்கள்!
"பாரத் ஆனே நேனு' படத்தின்மூலம் டோலிவுட்டில் நுழைந்தவர் கீரா அத்வானி. "ஆர்.சி.12', அர்ஜூன் ரெட்டியின் ரிமேக்கான "கபீர் சிங்' உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். அக்ஷய் குமார், அல்லு அர்ஜூன் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இப்படி அடுத்த ஆறு மாதங்களுக்கு பிஸிமோடில் இருக்கும் கீராவுடன் நடிக்க, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். போன்றோர் விருப்பம் தெரிவிக்கிறார்களாம். "
பாரத் ஆனே நேனு' வெற்றியின் மூலம் மகேஷ் பாபுவேகூட கீராவுடன்தான் நடிப்பேன் என்கிறாராம்.
அரசியலில் அமலாபால்!
இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமணம் கசப்பில் முறிந்துபோக, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார் அமலாபால். அவரிடம் இரண்டாவது திருமணம் பற்றிக் கேட்கப்பட, ""முதல் திருமணம் நான் முடிவெடுத்த தால் தோற்றுப்போனது. இரண்டாவது திருமண முடிவைப் பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் காட்டும் பையனுக்கு கண்ணை மூடிக்கொண்டு கழுத்தை நீட்டுவேன்'' என தெரிவித்துள்ளார். ""எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம் பற்றியும் யோசிப்பேன்'' என திகில் கிளப்புகிறார்.
ஒன்லி கிளுகிளு...
வெள்ளித்திரையில் காட்சி தராவிட்டாலும், இன்ஸ்டாகிராமில் கிளுகிளு புகைப்படங்களைப் பதிவிட்டு, ரசிகர்களைச் சூடேற்றியபடியே இருக்கிறார் இலிலியானா. தற்போது நீச்சலுடையில் இருக்கும் இலியானாவை அவரது ரகசிய கணவர் ஆன்ட்ரூ நீபோன் ஐபோனில் படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதோடு, கூடவே ஐபோன் கேமரா சூப்பர் என்றும் குறிப்பிட்டிருக் கிறார். ""கேமராவா முக்கியம்.. இலிலியானாவைப் பாருங்க சார்'' என ஜொல்லுகின்றனர் ரசிகர்கள்.
ஒயிலாட்டத்தில்! கின்னஸ் சாதனை
தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நாட்டுப்புறக் கலை களுள் ஒன்றான ஒயிலாட்டத்தை தென்மாவட்டங்களில் திருவிழாக்காலங்களில் கண்டு ரசித்து மகிழலாம். பொழுதுபோக்கிற்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும், மனஎழுச்சிக்காகவும் சிறந்த தகவல்தொடர்பு ஊடகமாக விளங்கும் ஒயிலாட்டக்கலையை உலகளவில் கொண்டுசெல்லும் முயற்சியாக 25-11-2018 (ஞாயிறு) அன்று, சென்னை திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் 5,000 பேர் கலந்துகொண்டு ஒயிலாட்டம் ஆடவுள்ளனர். ஆண்கள் மட்டுமே ஆடும் இந்த ஒயிலாட்டத்தின்மூலம் புராணக்கதைகளையும், வரலாற்றையும் பொது மக்களுக்கு எடுத்துச்சொல்ல சிறந்த கருவியாக விளங்கிய இக்கலையை வளர்க்கும்விதமாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னணிப் பாடகர் வேல்முருகன் ஒருங்கிணைப்பில், கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெறவுள்ள இந்த ஒயிலாட்ட விழாவில் தமிழக வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன், பத்மஸ்ரீ விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
தமிழர்களின் பெருமைகளையும் கலையுணர்வு களையும் பறைசாற்ற உள்ள இந்த கின்னஸ் சாதனை முயற்சிக்கு நடிகர் சங்கத்தலைவர் நாசர், தேவா, ஜி.வி. பிரகாஷ், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் தம்பி இராமையா, சூரி, ரோபோ சங்கர், போஸ் வெங்கட், வையாபுரி, சுப.வீ. உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கோக்குமாக்கு அஞ்சலி!
கொழுகொழு நடிகைகளைத்தான் தென்னிந்திய ரசிகர்கள் விரும்புவதுண்டு. அந்தவகையில் எடையைப் பற்றி கவலையே இல்லாமல், நடிப்புமூலமாகவே தனி கவனம் ஈர்த்தவர் அஞ்சலி.
ஆனால், காலப்போக்கில் கோக்குமாக்காக எடைபோட்டதில் அவருக்கான படவாய்ப்புகள் கணிசமாகக் குறைந்தன.
தற்போது எடையை முற்றிலுமாகக் குறைத்து புது லுக்கில் காட்சிதருகிறார் அஞ்சலிலி. இத்தனைக்கும் "கீதாஞ்சலிலி-2' என்கிற படம் மட்டும்தான் கையிலிலிருக்கிறது அவருக்கு.
தொலைச்சுப்புடுவேன்
மாடலிங்மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் நிதி அகர்வால். அடுத்தடுத்து சில படங்களிலும் கமிட்டாகிவரும் இவரிடம், மீ டூ, படுக்கையைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ""என்னிடம் அப்படி யாரும் அப்ரோச் செய்யவில்லை. அப்படி செய்தாலோ, முயற்சித்தாலோ அவ்வளவுதான். தொலைச்சுப்புடுவேன். எனக்குத் தெரிந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகள்மூலம் அவர்களுக்குத் தக்க பதில்சொல்லத் தயாராக இருக்கிறேன்'' என மிரட்டுகிறார்.
குழந்தை மனசு...
தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் ரகுல்பிரீத்சிங். இவர் மார்புக் கச்சை தெரிவதுபோல கிழிந்த சட்டையுடனான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் பலரும் இதைக் கிண்டல்செய்ய... ""யார் இந்த சட்டையைத் தைத்துக் கொடுத்தது?'' என்று ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு, ""என் குழந்தைத்தனமான மனசுதான்!'' என பளிச் ரிப்ளை கொடுத்திருக்கிறார் ரகுல்.
மீ டு டிரெண்டிங்
இளசுகளுக்கு மத்தியில் ட்ரென்டிங்கில் இருக்கிறது "எடு செப்பலா கதா' படத்தின் டீசர். வெளியான சில தினங்களிலேயே 20 மில்லியனுக்கும் அதிகமானோர் இதைப் பார்த்திருக்கின் றனர். தமிழ் ரசிகர்களும் இதற்கு அமோக ஆதரவளித் திருப்பதாகக்கூறும் "எடு செப்பலா கதா' படக்குழு, இளைஞர்களை இந்தப் படம் நிச்சயம் கவரும் என்றும், டெம்ப்ட் ரவி என்கிற ஹீரோ கதாபாத்திரம் தனது மீ டூ கதையைச் சொல்வதுதான் படத்தின் கரு என்றும் கூறியுள்ளது.
ஃபிட்னஸ் பிரச்சாரம்
பாலிவுட் நடிகையான பூஜா ஹெக்டே டோலிவுட்டில் ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ் பாபு, பிரபாஸ் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் பிஸியாக இருக்கிறார். கிளாமர் பதுமையான பூஜா, கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் நான்கு லட்சம் ஃபாலோயர்கள் தரிசனத்துக்குக் கொடுப்பது வழக்கம்.
இன்னொரு பக்கம் தன் கட்டுக்கோப்பான உடலுக்கு ஃபிட்னஸ் பயிற்சி எடுக்கும் புகைப் படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து "ஃபிட்டா இருங்க பாய்ஸ்' என பிரச்சாரமும் செய்கிறார்.
தவிர்க்கும் நடிகை!
உலகம் முழுவதும் சினிமா நடிகைகளின் அந்தரங்கப் படங்கள் ஹேக் செய்யப்பட்டு வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. சைபர் கிரைமின் இந்த கோரப்பிடி நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷராஹாசனையும் விட்டுவைக்கவில்லை. அக்ஷரா அரை நிர்வாணமாக இருக்கும் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன. இந்தப் புகைப்படங்களின் உண்மைத்தன்மை தெரியாத நிலையில், அக்ஷராவும் இதைப்பற்றி பேசுவதைத் தவிர்த்துவருகிறார்.
த்ரிஷாவின் பாராட்டு
ஒண்டர் உமன் என்ற சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கேல் கேடாட். அதிரடியான அந்தக் கதாபாத்திரத்தின் ஆக்ஷன் புகைப்படத்தில், நடிகை த்ரிஷாவின் படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டார் ஃப்ரீலேன்ஸ் எடிட்டரும், த்ரிஷாவின் ரசிகருமான ஒருவர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட த்ரிஷா, அந்த ரசிகரையும் பாராட்டியிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் கூடியசீக்கிரமே நீங்களும் ஒண்டர் உமனா தரிசனம் குடுக்கணும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிட்ஸ் தொகுப்பு:-மதிவாணன்