Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-12

"அறம்' கோபி நைனார், அடுத்ததாக ஜெய்- ஐஸ்வர்யா ராஜேஷ் காம்பினேஷனில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடத்திவருகிறார். "அறம்' படத்தின் ஓப்பனிங் சீன்கள் பொன்னேரி அருகே இருக்கும் பழவேற்காடு ஏரி அருகே நடந்து, அதன்பின் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது. அந்த சென்டிமெட் பிரகாரம், அதே பழவேற்காடு ஏரி அருகேதான் கோபி நைனாரின் ஜெய் பட ஷூட்டிங்கும் நடந்து வருகிறதாம்.

Advertisment

"அலையோடு விளையாடு' என்ற டைட்டிலில் சில வருடங்களுக்கு முன் ஒரு படம் தயாராகி ரிலீசாகமலேயே முடங்கியது. அந்தப் படத்தின் ஹீரோ விஜயன், இப்போது தனது பேரை தீரன் என மாற்றிவிட்டாராம். சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்த மகேஷ் இயக்கும் "தோழர் வெங்கடேஷ்' படத்தில் ஹீரோவுக்கு தோழராக நடிக்கிறாராம் தீரன்.

Advertisment

rasikanna"மலையன்' படத்தின் டைரக்டர் கோபி, ஜி.வி. பிரகாஷின் ரசி

"அறம்' கோபி நைனார், அடுத்ததாக ஜெய்- ஐஸ்வர்யா ராஜேஷ் காம்பினேஷனில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடத்திவருகிறார். "அறம்' படத்தின் ஓப்பனிங் சீன்கள் பொன்னேரி அருகே இருக்கும் பழவேற்காடு ஏரி அருகே நடந்து, அதன்பின் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது. அந்த சென்டிமெட் பிரகாரம், அதே பழவேற்காடு ஏரி அருகேதான் கோபி நைனாரின் ஜெய் பட ஷூட்டிங்கும் நடந்து வருகிறதாம்.

Advertisment

"அலையோடு விளையாடு' என்ற டைட்டிலில் சில வருடங்களுக்கு முன் ஒரு படம் தயாராகி ரிலீசாகமலேயே முடங்கியது. அந்தப் படத்தின் ஹீரோ விஜயன், இப்போது தனது பேரை தீரன் என மாற்றிவிட்டாராம். சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்த மகேஷ் இயக்கும் "தோழர் வெங்கடேஷ்' படத்தில் ஹீரோவுக்கு தோழராக நடிக்கிறாராம் தீரன்.

Advertisment

rasikanna"மலையன்' படத்தின் டைரக்டர் கோபி, ஜி.வி. பிரகாஷின் ரசிகர் மன்றத் தலைவராகவும், தனுஷ் ரசிகர் மன்றச் செயலாளராக டைரக்டர் சுப்பிரமணிய சிவாவும், விஷால் ரசிகர் மன்றத் தலைவராக ‘"தம்பி வெட்டோத்தி சுந்தரம்'’ படத்தின் தயாரிப்பாளரும் செயல்பட்டு வருகின்றனர்.

மிழில் முதன்முதலாக அறிமுகமான "நோட்டா' படம் ஹிட்டானதில் ஹேப்பியாக இருக்கிறார் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரஹொண்டா. அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் டைரக்ட் பண்ணும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கிடையே தெலுங்குப் படமொன்றில் விஜய் தேவரஹொண்டாவும் ராஷி கண்ணாவும் ஜோடி போடுகிறார்கள். இதில் விஜய் தேவரஹொண்டாவை எதிர்த்து நிற்கும் கேரக்டரில் நம்ம ஊரு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

"சண்டக்கோழி' முதல் பாகத்தில் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த நூருதீன் டைரக்டராக புரோமஷன் ஆகிவிட்டாராம்.

"பேரன்புமிக்க பெரியோர்களே தாய்மார்களே' படத்தைத் தவிர டைரக்டர் அமீர் கைவசம் படங்கள் எதுவுமில்லை. இப்போதிருக்கும் மார்க்கெட் டிரெண்ட்படி எந்த ஹீரோவும் அமீரை அணுகுவதில்லை என்பதால் தர்ஹாக்களுக்கு விசிட் அடித்து வருகிறாராம் அமீர்.

சுசீந்திரன் டைரக்ஷனில் ரெடியான "ஜீனியஸ்' படம் பிரமாதமாக வந்திருக்கிறதாம். ஆனாலும் பிசினஸ் ஆவதில் கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்காம்.

""இந்தியாவில் சினிமாவில் மட்டுமல்ல, பொதுவாகவே பெண்களின் நிலை கஷ்டமாகத்தான் இருக்கிறது. சினிமா ஹீரோயின்கள் என்பதால் மட்டும் ஈஸியாக ஃபோகஸ் ஆகிவிடுகிறோம்'' என்கிறார் இந்தி நடிகையான் சோகா அலிகான்.

சுந்தர் சி. டைரக்ட் பண்ணும் தெலுங்கு ரீமேக்கான "அயோக்யா'வில் ஹீரோ விஷாலுக்கு இணையாக வலுவான கேரக்டராம் ரா. பார்த்திபனுக்கு.

சூர்யாவின் "கடைக்குட்டி சிங்கம்' படமும் செம ஹிட், சூரியின் காமெடியும் செம ஹிட். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசான சிவகார்த்திகேயனின் "சீமராஜா' வசூலும் டல், சூரியின் காமெடியோ செம டல். அதனால் தனது சம்பளத்தை தினசரி 3 லட்சத்திலிருந்து 2 லட்சமாகவும், தேவைப்பட்டால் 1 லட்சமாகவும் குறைத்துக் கொள்ளும் ஐடியாவுக்கு வந்துள்ளாராம் சூரி.

முத்தையா டைரக்ஷனில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும் மஞ்சிமா மோகன் ஹீரோயினாகவும் நடிக்கும் "தேவராட்டம்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. படத்தில் நடிக்கும் மற்ற கேரக்டர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதால், 25 வருடங்களுக்கும் மேலாக மதுரை தங்கரீகல் தியேட்டர் எதிரே இயங்கிவரும் டப்பிங் தியேட்டரில்தான் டப்பிங் பணிகள் நடக்கிறதாம். இசைக் கோர்ப்பும் மற்ற வேலைகளும் சென்னையில் இருக்கும் ரெக்கார்டிங் தியேட்டர்களில் நடைபெறுகிறது.

சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, கிச்சா சுதீப், ஜெகபதி பாபு போன்ற மெகா ஸ்டார்கள் நடிப்பில் மெகா மெகா பட்ஜெட்டில் தயாராகிவருகிறது "சையா நரசிம்மரெட்டி'. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீசாவதால்தான் நான்கு மொழி ஹீரோக்களையும் வளைத்திருக்கிறார் கள். படத்தின் க்ளைமாக்ஸ் சீனுக்காக மட்டும் 50 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டிருக்கிறார் களாம். ஜார்ஜியா நாட்டில் நடக்கும் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்கிற்காக அனைத்து ஸ்டார்களும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

"கொடி' படத்தையடுத்து மீண்டும் தனுஷுடம் கதை சொல்லிலி ஓ.கே.வாங்கியிருக்காராம் டைரக்டர் துரை செந்தில்குமார்.

ற்குணத்தின் "களவாணி-2' ஃபைனான்ஸ் சிக்கலில் மாட்டிக் கொண்டதால், ஹீரோ விமல் 30 லட்சமும், ஹீரோயின் ஓவியா 30 லட்சமும் தங்களது சம்பளத்திலிருந்து விட்டுக்கொடுத்துள்ளனர்.

cine231018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe