Advertisment
/idhalgal/cinikkuttu/bit-bazaar-5

நீண்ட இடைவெளிக்குப் பின் டைரக்ஷன் களத்திற்கு வந்துள்ளார் ஆர்.மாதேஷ். மலையாளத்தில் திலீப்-மம்தா மோகன்தாஸ் நடித்து, ஜீத்து ஜோசப் டைரக்ட் பண்ணி, பெரிய ஹிட் அடித்த "மை பாஸ்' என்ற படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி, தமிழுக்கு ஏற்றாற்போல் "சண்டக்காரி-தி பாஸ்' என டைட்டில் வைத்துள்ளார் ஆர்.மாதேஷ்.

Advertisment

tri

விமல் ஹீரோவாகவும், ரஷ்யாக்காரரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா ஹீரோயினாகவும் வருகிறார்கள். படத்தின் கொஞ்சூண்டு ஏரியா கேரளாவிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு நியூயார்க், லண்டன், வெனிஸ் நாடுகளிலும் நடந்துள்ளதாம்.

Advertisment

se

இப்போதெல்லாம் வெப் சீரிஸில் நடிப்பதையே முக்கால்வாசி நட்சத்திரங்கள் விரும்புகிறார்கள். அதிலும் டி.வி. சீரியல்களிலும் நிஜத்திலும் கணவன்- மனைவியாக இருக்கு

நீண்ட இடைவெளிக்குப் பின் டைரக்ஷன் களத்திற்கு வந்துள்ளார் ஆர்.மாதேஷ். மலையாளத்தில் திலீப்-மம்தா மோகன்தாஸ் நடித்து, ஜீத்து ஜோசப் டைரக்ட் பண்ணி, பெரிய ஹிட் அடித்த "மை பாஸ்' என்ற படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி, தமிழுக்கு ஏற்றாற்போல் "சண்டக்காரி-தி பாஸ்' என டைட்டில் வைத்துள்ளார் ஆர்.மாதேஷ்.

Advertisment

tri

விமல் ஹீரோவாகவும், ரஷ்யாக்காரரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா ஹீரோயினாகவும் வருகிறார்கள். படத்தின் கொஞ்சூண்டு ஏரியா கேரளாவிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு நியூயார்க், லண்டன், வெனிஸ் நாடுகளிலும் நடந்துள்ளதாம்.

Advertisment

se

இப்போதெல்லாம் வெப் சீரிஸில் நடிப்பதையே முக்கால்வாசி நட்சத்திரங்கள் விரும்புகிறார்கள். அதிலும் டி.வி. சீரியல்களிலும் நிஜத்திலும் கணவன்- மனைவியாக இருக்கும் மிர்சி செந்திலும் ஸ்ரீஜா சந்திரனும் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள். "மன்மதன் அம்பு,' "கோச்சடையான்,' "லிலிங்கா' படங்களில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசோசியேட் டைரக்டராக வேலை பார்த்த ஜஸ்வினி டைரக்ட் பண்ணும் "கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0' என்ற வெப் சீரிஸ் ஜூலை 22-ஆம் தேதியிலிருந்து எம்.எக்ஸ் பிளேயரில் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. எம்.எக்ஸ் பிளேயர் என்ற பொழுதுபோக்கு ஆப், தினசரி ஏழரை கோடி பார்வையாளர்களை வைத்துள்ளதாம். இதில் நடிப்பது செம ஹேப்பி என்கிறார்கள் செந்திலும் ஸ்ரீஜா சந்திரனும். இந்த வெப் சீரிஸுக்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.

தெலுங்கில் பவன் கல்யாண், பிரபாஸ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் ஷிவராஜ் குமார் ஆகியோருடன் நடித்த சஞ்சனா கல்ராணி, தமிழுக்கும் வந்திறங்கி விட்டார். அருண் விஜய்யின் "பாக்ஸர்' படத்தில் கமிட்டாகியிருக்கும் சஞ்சனா கல்ராணி, சிறந்த யோகா டீச்சராம். (இங்கிருக்கும் ஸ்டில்சைப் பார்த்தாலே தெரியுது.) அதவிட முக்கியமான சங்கதி என்னன்னா... நம்ம நிக்கி கல்ராணியின் சொந்த அக்காதான் இந்த சஞ்சனா கல்ராணி. (நாட்டுக்கு எவ்வளவு பெரிய-அரிய சங்கதிய சொல்லிலிட்டோம்!)

செந்தூர் பிலிம் இன்டர் நேஷனல் டி.டி.ராஜாவின் தயாரிப்பில் சசிகுமார்- நிக்கி கல்ராணி ஜோடி போட்ட "ராஜ வம்சம்' படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. இதையடுத்து விஜய் ஆண்டனியை ஹீரோவாகப் போட்டு அரசியல்-த்ரில்லர் படத்தைத் தயாரிக்கிறார் டி.டி.ராஜா. "மெட்ரோ' படத்தை டைரக்ட் பண்ணிய ஆனந்த கிருஷ்ணன் தான் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை டைரக்ட் பண்ணுகிறார். ஹீரோயின் கேரக்டருக்கு ப்ரியா பவானிசங்கர், "மேயாத மான்' இந்துஜா ஆகியோரிடம் பேசி வருகிறார்களாம்.

dd

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா ஜோடி போட்ட "டியர் காம்ரேட்' வருகிற 26-ஆம் தேதி ரிலீசாகிறது. அதே நாளில் தமிழிலும் டப்பிங்காகி ரிலீசாவதால், தமிழுக்கேற்றபடி சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். தமிழ் ரிலீஸ் புரமோஷனுக்காக விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் சென்னை வந்திருந்தனர். தனது செல்லச் சேட்டைகளால் மழையவிட ஜிலீர்னு ஃபங்ஷன் ஸ்பாட்டைக் குளிர்வித்தார் ராஷ்மிகா மந்தனா.

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பேசின் பிரிட்ஜ் ரயில்வே ஸ்டேஷன் போன்று செட் போட்டு, விஜய்யின் "பிகில்' ஷூட்டிங் நடந்து வருகிறது.

vijay

தனது கம்பெனியில் படம் பண்ண வாய்ப்புத் தருவதாக டைரக்டர் பொன்.ராமிடம் சொல்லிலிச் சொல்லிஜவ்வாக இழுத்து கடைசியில் கழட்டிவிட்டுவிட்டாராம் சமுத்திரகனி.

அத்திவரதர் தரிசனம் திடீர் புகழ் பெற்றுள்ளதால், விஜயகாந்தும் அத்திவரதரை தரிசனம் செய்தார். தனது மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஒரு சீனை சென்டிமென்டாக காஞ்சிபுரத்தில் ஷூட் பண்ணச் சொல்லியுள்ளாராம் பிரேமலதா விஜயகாந்த்.

சென்னை வளசரவாக்கத்திலிருந்த வீட்டை விற்று கிடைத்த பணத்தில் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகில் மூன்றடுக்கு காம்ப்ளெக்ஸ் ஒன்றை கட்டி வருகிறார் காமெடி கஞ்சா கருப்பு. படம் முடிந்து இரண்டு வருடமாகியும் சுப்ரமணிய சிவாவின் "வெள்ளை யானை' திரைக்கு வந்தபாடில்லை. தனுஷ் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தும் படத்தை ரிலீஸ் பண்ண முடியவில்லையே என சோகத்தில் புலம்புகிறாராம் சுப்ரமணிய சிவா.

cine300719
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe