rajena

சுதீப்கிஷன்- ரெஜினா சாண்ட்ரா ஜோடியில் "மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கார்த்தியை வைத்து அடுத்த படத்தை டைரக்ட் பண்ணுகிறார். இதற்காக தாம்பரத்தை அடுத்த படப்பையில் பல லட்சம் செலவில் மூங்கில் வீடுகள் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. சமீபத்தில் ரிலீசான "சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஹிட் அடித்ததில் செம குஷியாக இருக்கிறார் ரெஜினா சாண்ட்ரா.

anjali

Advertisment

விமல்- அஞ்சலி ஜோடிபோட்டு ரிலீசான "மாப்ள சிங்கம்' படத்தின் டைரக்டர் ராஜசேகர், இப்போது சூப்பர்குட் பிலிலிம்ஸுக்காக ஜீவா- அருள்நிதி காம்பினேஷனில் ஒரு படத்தை எடுத்துவருகிறார். நீண்ட இடை வெளிக்குப்பிறகு தங்களது சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் படம் தயாராவ தால், மற்ற படங்களைத் தள்ளி வைத்துவிட்டு, முழு வீச்சில் இந்தப் படத்தில் இறங்கி உள்ளாராம் ஜீவா.

nayanthara

Advertisment

விஜய்- அட்லீ- நயன்தாரா கூட்டணி சேரும் ஏ.ஜி.எஸ். படத்தின் ஷூட்டிங் ஜனவரி 25-ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக இரு இதழ்களுக்கு முன்பு எழுதியிருந்தோம். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லிலில் நடக்கவிருப்பதால், அங்கு பிரம்மாண்ட செட் போடும் வேலைகள் சூப்பர் விறுவிறுப் பாக நடந்துவருகின்றன.

சித்தார்த்தை வைத்து சிம்புதேவன் டைரக்ட் பண்ணிவரும் படத்தில் டைரக்டர் வெங்கட்பிரபுவும் அவரது தம்பி பிரேம்ஜியும் இணைந்துள்ளனர். படம் முடியும்வரை எதுவும் பேசப் போவதில்லை, படம்தான் பேசவேண்டும் என்ற முடிவில் அமைதி காக்கிறார் சிம்புதேவன்.

ரா. பார்த்திபனின் "கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம்' படத்தின் ஹீரோ சந்தோஷ்குமாரின் அடுத்தடுத்த படங்கள் போணியாகாத தால் வெப்சீரிஸ் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்காராம்.

விஜய்சேதுபதியின் "மாமனிதன்' படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்கும் முடிவோடு இருப்பதால், தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவருகிறது.

சசிகுமார்- எஸ்.ஆர். பிரபாகரன் காம்பினேஷனில் தயாராகிவரும் "கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தில் மடோனா செபஸ்டின் ஹீரோயின் என்றாலும் செகண்ட் ஹீரோயினாக வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறார் ஸ்ரீபிரியங்கா. சுரேஷ் காமாட்சியின் "மிகமிக அவசரம்' படம் எப்பத்தான் ரிலீசாகுமோ என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார் பிரியங்கா.

வினய்- பாவனா- லேகா வாஷிங்டன்- சந்தானம் இவர்களை வைத்து "ஜெயம் கொண்டான்' படம் எடுத்த டைரக்டர் கண்ணன், இப்போது அதர்வா- மேகா ஆகாஷ் ஜோடியில் "பூமராங்' படத்தை எடுத்துமுடித்துள்ளார். படம் முடிந்து பல மாதங்களாகியும், டிஸ்டிரிபியூட்டர் யாரும் வாங்க முன் வராததால், தானே சொந்தமாக ரிலீஸ் செய்யும் ரிஸ்க்கான வேலைகளில் இறங்கி விட்டாராம் கண்ணன்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஹீரோவாக நடிக்கும் "நட்பே துணை' படத்தின் ஷூட்டிங், சென்னை அயனாவரத்தில் இருக்கும் ஐ.சி.எஃப். ஹாக்கி கிரவுண்டில் நடந்துவருகிறது.

"அங்காடித் தெரு' மகேஷ், இப்போது "என் காதலிலி சீன் போடுறா', "கருப்பு ஆடு', "வீராபுரம்' என செமபிஸியாக இருக்கிறார்.

"கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தை டைரக்ட் பண்ணிய பாடலாசிரியர் ஏகாதசி, இப்போது பாடல் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

கே.வி. ஆனந்த்- சூர்யா காம்பினேஷனில் தயாராகும் படத்திற்கு "காப்பான்' என்ற டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். "காப்பான்' என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லாம். கே.வி. ஆனந்த் இதற்குமுன்பு டைரக்ட் பண்ணிய "கோ', "கவன்', "அயன்', எல்லாமே கடவுளைக் குறிக்கும் சென்டிமென்டால் இப்போது "காப்பான்' என பெயர் வைத்துள்ளாராம்.

தமிழில் தாறுமாறு ஹிட் அடித்த "96' தெலுங்கில் ரீமேக்காகிறது. விஜய் சேதுபதி கேரக்டரில் சர்வானந்த் நடிக்க, ஜானகி கேரக்டரில் சமந்தா நடிக்கிறார்.

vijayasethupathi

அவர்தான் நடிக்க வேண்டும்!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 96. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு வாங்கி இருக்கிறார். இதில் சர்வானந்த் நடிக்கிறார்.

இவர் "எங்கேயும் எப்போதும்' தமிழ் படத்தில் நடித்தவர். இதில் திரிஷாவை நடிக்க வைக்க இயக்குநருக்கு விரும்பம். ஆனால் தயாரிப்பாளர் சமந்தா நடித்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.

madona

ஏமாற்றிவிட்டார்!

பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ், "மிளகாய்', "சதுரங்க வேட்டை', "எங்கிட்ட மோததே', "போங்கு' ஆகிய படங்களில் நடித்து மிகவும் நடிகராக பிரபலமானார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையில் ஜீவா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினதுதான் தவறான முயற்சி. இதற்கு காரணம் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரனும், அவரது மேனேஜர் ஆண்டனியும் என்னை ஏமாற்றி விட்டார்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார். ஜீவா படத்தில் ‘ஒரு ரோசா...’ என்ற ஒரு பாடலுக்கு நட்டி நட்ராஜ் நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

bitsbazar

சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையான "மணிகர்னிகா'-வில் நடித்து முடித்துள்ளார் கங்கனா ரனவத். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் சத்தியம் தியேட்டரில் நடந்தது. இந்திப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது இதுதான் முதன்முறையாம்.

samantha

தேவர் பிலிம்ஸ் தயாரித்த ரஜினியின் "ரங்கா' டைட்டிலில் நடித்து வருகிறார் சிபிராஜ். முதல் கட்டப் படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்த கட்டமாக 25 நாட்கள் இமாச்சலப் பிரதேசத்திலும் நடந்து முடிந்து, இப்போது டப்பிங் வேலைகள் நடந்து வருகிறதாம்.

gaganaishagupta

அவரே வெளியிட்டார்!

எப்போதும் கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன் என ஒரு சில நடிகைகள் கூறினாலும், அதற்கு அப்படியே நேர்மறையான பல நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கவர்ச்சியை மட்டுமே நம்பி சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்கள்.நடிகை இஷா குப்தா தற்போது அது போல மேலாடை எதுவும் இல்லாமல் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த நடிகை பாவனா ராவ், "பை பாஸ் ரோடு' என்ற படத்தின்மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார்.

bavana

விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்துவரும் காயத்ரி, பாபி சிம்ஹா நடித்த வெப்சீரிசான "வெள்ள ராஜா'-விலும் நடித்திருக்கிறார். வெப்சீரிசுக்கென தனி ஆடியன்ஸ் பெருகி வருவதால், சினிமாவுக்கும் வெப்சீரிசுக்கும் சமமுக்கியத்துவம் கொடுக்கும் முடிவில் இருக்காராம் டைரக்டர் கிச்சாஸி டம் "நேதாஜி', "மாசி', "தங்கம்' ஆகிய படங் களில் உதவி இயக்குநராக வேலை செய்த கார்த்தி, இப்போது குழந்தைகளுக்கான படம் ஒன்றின்மூலம் டைரக்டராக புரொமோஷன் ஆகியுள்ளார்.