Advertisment
/idhalgal/cinikkuttu/bit-bazaar-1

த்தின சிவா இப்போது ஜீவாவை வைத்து டைரக்ட் பண்ணிவரும் படம் மயிலாடுதுறையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்டங்களே கடும் சேதத்துக்குள்ளாகியிருப்பதால், அந்தப் பகுதியில் oviyaபடப்பிடிப்பு நடத்த முடியாமல், சென்னை உத்தண்டி அருகே இருக்கும் மெடிக்கல் காலேஜ் கிரவுண்டில் மயிலாடுதுறை செட் போட்

த்தின சிவா இப்போது ஜீவாவை வைத்து டைரக்ட் பண்ணிவரும் படம் மயிலாடுதுறையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்டங்களே கடும் சேதத்துக்குள்ளாகியிருப்பதால், அந்தப் பகுதியில் oviyaபடப்பிடிப்பு நடத்த முடியாமல், சென்னை உத்தண்டி அருகே இருக்கும் மெடிக்கல் காலேஜ் கிரவுண்டில் மயிலாடுதுறை செட் போட்டு ஷூட்டிங் நடக்கிறதாம்.

Advertisment

விஷ்ணு விஷால்- அமலாபால் காம்பினேஷனில் டைரக்ட் பண்ணிய "ராட்சசன்' ஹிட் அடித்ததால் பெரிய ஹீரோக்களின் கவனத்திற்குரிய டைரக்டராகி யிருக்கிறார் ராம். இப்போது தனுஷை வைத்து படம் பண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் ராம்.

Advertisment

"கள்ளத்துப்பாக்கி'-யின் டைரக்டர் கட்டபொம்மன், அடுத்ததாக பசுபதியை ஹீரோவாக போட்டு படம் பண்ணப்போறாராம்.

உடல்நலம் சற்றே சரியில்லாததால் கே.வி. ஆனந்த் படத்திற்கு பிரேக் விட்டிருந்தார் சூர்யா. இப்போது எல்லாம் ஓ.கே. ஆனதும் புதுச்சேரியில் ஷூட்டிங் நடந்துவருகிறது.

வைகைப் புயல் வடிவேலுவின் இம்சையால், "இம்சை இரண்டாம் புலிலிகேசி-2'-வின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இதனால் புண்பட்ட மனசை சிரிப்பு மருந்துமூலம் ஆற்றும்விதமாக சித்தார்த்தை வைத்து காமெடி படம் ஒன்றை டைரக்ட் பண்ணி வருகிறார் சிம்புதேவன்.

வடிவேல் நடித்த ‘"இந்திரலோகத்தின் நா.அழகப்பன்'’ படத்தின் பார்ட்-2-தான், இப்போது யோகிபாபு ஹீரோவாக நடித்துவரும் ‘"தர்மபிரபு.' யோகியும் ஹீரோவாகிவிட்டதால், புதிய காமெடி நடிகர்களை அறிமுகப்படுத்துவதில் டைரக்டர்கள் தீவிரம் காட்டிவருகிறார்களாம்.

சமீபத்தில் ஒரு டைரக்டர், ஓவியாவிடம் ""என்னோட படத்துல வரும் லேடி கேரக்டருக்கு பத்து சீன் இருக்கு. பத்துமே செம மாஸா இருக்கும். அந்த கேரக்டர்ல நீங்க நடிச்சா நல்லா இருக்கும்'' என்றிருக்கிறார். உடனே ஓவியா, “"""களவாணி-2'’ வந்துச்சுன்னா என்னோட ரேஞ்சே வேற. இந்தமாதிரி சின்ன கேரக்டர்களை நான் பண்றதில்ல'' என தெனாவெட்டாக சொன்னாராம்.

cine251218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe