Advertisment
/idhalgal/cinikkuttu/bit-bazaar-0

புண்ணிய ஸ்தலமான காசியில் வாழும் அகோரிகளைப் பற்றிய கதைதான் சீனு ராமசாமி டைரக்ஷனில் விஜய் சேதுபதி நடித்துவரும் "மாமனிதன்.'

Advertisment

விஷாலிலின் மாஜி மேனேஜர் முருகராஜ் தயாரிப்பில் விக்ராந்த் நடிக்கும் "பக்ரீத்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து முடிந்துள்ளது.

Advertisment

saipalavi

கவிஞர்கள் கார்த்திக் நேத்தா, பிரான்சிஸ் கிருபா, தொல்காப்பியன் ஆகிய மூவரும் குடியை மறக்கடிக்கும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்களாம்.

பிக்பாஸ் வீட்டில் நடிகை விஜய லட்சுமி (டைரக்டர் அகத்தியனின் மகள்) இருந்தபோது, அவரது மகன் நிலனின் குறும்புத்தனத்தைப் பார்த்ததிலிருந்து, நடிகை மும்தாஜுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை அதிகமாகிவிட்டதாம். குழந்தை பெறணும்னா, முதல்ல கல்யாணம் பண்ணனும் மும்தாஜ் மேடம்.

ராணி வீரமாதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து வி.சி. வடிவுடையான் டைரக்ட் பண்ணப்போகும் "வீரமாதேவி' படத்தில் வீரமாதேவி யாக நடிக்க சன்னிலிலியோனுக்கு தடைவிதிக்க வே

புண்ணிய ஸ்தலமான காசியில் வாழும் அகோரிகளைப் பற்றிய கதைதான் சீனு ராமசாமி டைரக்ஷனில் விஜய் சேதுபதி நடித்துவரும் "மாமனிதன்.'

Advertisment

விஷாலிலின் மாஜி மேனேஜர் முருகராஜ் தயாரிப்பில் விக்ராந்த் நடிக்கும் "பக்ரீத்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து முடிந்துள்ளது.

Advertisment

saipalavi

கவிஞர்கள் கார்த்திக் நேத்தா, பிரான்சிஸ் கிருபா, தொல்காப்பியன் ஆகிய மூவரும் குடியை மறக்கடிக்கும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்களாம்.

பிக்பாஸ் வீட்டில் நடிகை விஜய லட்சுமி (டைரக்டர் அகத்தியனின் மகள்) இருந்தபோது, அவரது மகன் நிலனின் குறும்புத்தனத்தைப் பார்த்ததிலிருந்து, நடிகை மும்தாஜுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை அதிகமாகிவிட்டதாம். குழந்தை பெறணும்னா, முதல்ல கல்யாணம் பண்ணனும் மும்தாஜ் மேடம்.

ராணி வீரமாதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து வி.சி. வடிவுடையான் டைரக்ட் பண்ணப்போகும் "வீரமாதேவி' படத்தில் வீரமாதேவி யாக நடிக்க சன்னிலிலியோனுக்கு தடைவிதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார் ஒரு பார்ட்டி. தடைவிதிக்க முடியாது என இனிப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது கோர்ட்.

ஹிட் சென்டிமென்ட் காரணமாக "வெண்ணிலா கபடிக்குழு' எடுக்கப்பட்ட அதே லொகேஷனில்தான், இப்போது "கென்னடி க்ளப்' பையும் எடுத்துவருகிறார் டைரக்டர் சுசீந்திரன். ஃபைனான்ஸ் சிக்கலால் தடைப்பட்டிருந்தது "களவாணி-2'-வின் டப்பிங் வேலைகள். இப்போது சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் டப்பிங் தியேட்டரில் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறதாம்.

sunny

"துப்பாக்கிமுனை' படத்தில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விக்ரம்பிரபு. சென்னை- பல்லாவரம் அருகே இருக்கும் காட்டுப்பகுதியில்தான் படத்தின் பாதி ஷூட்டிங் நடந்துள்ளதாம்.

சென்னை சாலிலிகிராமத்தில் இருக் கும் ஒரு டீக்கடைதான் சினிமா சான்ஸ் தேடி அலைபவர்களுக்கு ஜங்ஷன் பாயின்ட். சமீபத்தில் ரிலீசாகி நல்ல பேரையும் வெற்றியையும் சம்பாதித்த விஷ்ணு விஷாலின் "ராட்சன்' படத்தின் டைரக்டர் ராம்குமாரின் ஜங்ஷன் பாயின்டும் அதுதான். "ராட்சன்' படத்தில் நடித்த ஒரு சிறுவனின் பிறந்த நாளை, கடந்த வாரம் அதே டீக்கடையில் அமர்க்களமாகக் கொண்டாடியிருக்கிறார் ராம்குமார்.

இந்திப் படம் ஒன்றில் கஞ்சா கருப்பு கமிட் ஆகியிருப்பதால் மும்பைக்கும் சென்னைக்கும் ஃப்ளைட்டில் பறந்து கொண்டிருக்கிறார்.

கோவளம் கடற்கரைப் பகுதியில் செட் போடப்பட்டு, பிரபுதேவாவின் "எங் மங் சங்' ஷூட்டிங் பரபரப்பாக நடந்துவருகிறது.

sivakarthikeyan

"சீமராஜா' லேசாக சறுக்கிய தால், இப்போது ராஜேஷ். எம். டைரக்ஷனில் நயன்தாராவுடன் நடித்துவரும் படத்துக்கு பிரேக் விட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஸ்கிரீன் பிளேவில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ராஜேஷுக்கு சிவா வேண்டுகோள் வைத்திருப்பதால் தான் இந்த பிரேக்காம்.

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியனுக்கு ஜோடி யாக "மதுரவீரன்' படத்தில் அறிமுகமானார் கேரள வரவான மீனாட்சி. பதினோறாம் வகுப்பு பரீட்சை வந்ததால், ஒரு பிரேக்விட்ட மீனாட்சி, மீண்டும் தமிழில் சான்ஸ் பிடி வேலைகளில் இறங்கிவிட்டார். "மதுரவீரன்' போல கிராமத்துப் பெண் கேரக்டர்கள் வந்தபோது மறுத்துவிட்டாராம். ஓரளவு கிளாமரான மாடர்ன் கேர்ள் கேரக்டர்களை கேட்ச் பண்ணியே தீருவது என களம் இறங்கி, புது டைரக்டர்களை வலைவீசித் தேடி வருகிறார் மீனாட்சி.

meenakshiசென்னை அண்ணா நகரில் ஓட்டல் நடத்திவரும் ஆர்யா, பிரபல ஸ்வீட் ஸ்டால்களுக்கு சவால்விடும் வகையில் ஸ்வீட் ஸ்டால் திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, கோபாவேசத்துடன் செல்ஃபோனைத் தட்டிவிட்டார் நடிகர் சிவகுமார். இதைப் பார்த்து சோஷியல் மீடியாவில் சிவகுமாரை கடுமையாக அர்ச்சித்தார்கள்.

இதனால் சிவகுமாரும் மன்னிப்புக் கேட்டார். தங்களது அப்பாவின் ஆக்ஷனால் வருத்தப்பட்ட சூர்யாவும் கார்த்தியும் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோனை வாங்கி அந்த இளைஞருக்கு அனுப்பி, மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கிழக்கு கடற்கரை சாலையில் புதிய வீடு ஒன்றை கட்டி இருக்கிறார் நடிகை சினேகா. "அப்பா' படத்தின் இரண்டாம் பாகத்தை டிசம்பரில் துவங்குகி றார் இயக்குநர் சமுத்திரகனி.

அடுத்த படத்திற்கான கதை உருவாக்கத்தில் இறங்கி இருக்கி றார் இயக்குநர் மணிரத்னம்.

சிறுவர்களை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நகைச்சவை நடிகர் சின்னி ஜெயந்த்.

தனது மகன் வாசன் கார்த்திக் நடிப்பதற்காக, ஒரு நகைச்சுவை கலந்த கதையை உருவாக்கி வருகிறார் நடிகர் சிங்கமுத்து.

sivakumar

karthi

காய்ச்சல் காரணமாக பதினைந்து நாட்கள் ஓய்வில் இருந்திருக்கி றார் நடிகர் டி. ராஜேந்தர்.

மகன் சாந்தனுவுக்காக ஒரு கதை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கே. பாக்யராஜ்.

கன்னடப் படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகி றார் இயக்குநர் பி. வாசு.

கருணாஸ் மகன் கெவின் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

உலக அளவில் மனிதனின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி ஒரு வரலாற்றுத் தொடரை தனது முகநூலில் எழுதி வருகிறார் நடிகர் பொன்வண்ணன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் கதை கேட்பது என்று முடிவு செய்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

அடுத்த படத்தில் மீண்டும் சமுத்திரகனியுடன் இணைந்து நடிக்கிறார் நடிகர் சசிகுமார்.

cine201118
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe