ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த பிரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் பிரபாஸ். இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23-ஆம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான "சாஹூ' திரைபடத்தின் ""Shades of Saaho'எனும் பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prabhas.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prabhas1.jpg)
இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் "சாஹூ' மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது.
இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க, ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர்.
இயக்குநர் சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் ஆகியோரின் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-10/prabhas-t.jpg)