யக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, "தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட்' சார்பில் தயாராகும் பெயரிடப் படாத படத்தின் படப்பிடிப்பை, பருவ நிலை மாறுபாடுகள் கொண்ட சூழலிலும் ஊட்டியில் திட்டமிட்டபடி மிக விரைவாக முடித்துள்ளார்.

Advertisment

bindu

இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசும்போது, ""படக்குழு அனைவரின் ஒத்துழைப் பால்தான் இது சாத்தியமானது. ஒவ்வொருவரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் உழைப்பையும் தந்துள்ளனர். ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த சிரமமான சுற்றுப்புறச் சூழலில், மிகுந்த கஷ்டத்திற்கு இடையே 30 நாட்கள் தொடர்ந்து படம்பிடித்தோம். கடும் பனிப்பொழிவில் நடிகைகள் பிந்து மாதவி, தர்ஷனா பானிக் அகியோரின் அர்ப்பணிப்பும், படத்தின்மீது அவர்களது காதலும் பிரமிக்கும்படி இருந்தது. சிறுமுகச்சுழிப்புகூட இல்லாமல் இருவரும் மிகக்கடுமையாக உழைத்தார்கள். ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர். அவரும் அவரது குழுவும் இல்லையெனில் இப்படப்பிடிப்பு சாத்தியமாகியிருக்காது. பல்வேறு பிரச்சினைகளில் தயாரிப்புக் குழுவின் ஆதரவு அற்புதமாக இருந்தது.

dd

Advertisment

இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்குப் பயணமாகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் அதை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உளவியல்ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள்'' என்றார்.