Advertisment

பிக்பாஸ்-3 கசமுசா சங்கதிகள்!

/idhalgal/cinikkuttu/bigg-boss-3-casamuza-societies

விஜய் டி.வி.யில் "பிக்பாஸ்' நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார் என 2017-ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியானதுமே தமிழகம் முழுவதும் பரபரப்பானது. "பிக்பாஸி'-ன் முதல் எபிசோடில் ஓவியா, நமீதா, அனுயா, வையாபுரி, காயத்ரி ரகுராம், ஆர்த்தி, ரைசா வில்சன், கஞ்சா கருப்பு, ஜூலிலி, ஆரவ், கடைசிக் கட்டத்தில் பிந்துமாதவி என கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே பிரபலமான சினிமா முகங்கள். அதேபோல் 2018-ல் கமல் தொகுத்து வழங்கிய "பிக்பாஸ்-2'-விலும் மும்தாஜ், யாஷிகா ஆனந்த், ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா என அனைவருமே மக்களுக்கு நன்கு தெரிந்த சினிமா பிரபலங்கள். முதல் எபிசோடில் ஓவியா- ஆரவ் இருவருக

விஜய் டி.வி.யில் "பிக்பாஸ்' நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார் என 2017-ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியானதுமே தமிழகம் முழுவதும் பரபரப்பானது. "பிக்பாஸி'-ன் முதல் எபிசோடில் ஓவியா, நமீதா, அனுயா, வையாபுரி, காயத்ரி ரகுராம், ஆர்த்தி, ரைசா வில்சன், கஞ்சா கருப்பு, ஜூலிலி, ஆரவ், கடைசிக் கட்டத்தில் பிந்துமாதவி என கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே பிரபலமான சினிமா முகங்கள். அதேபோல் 2018-ல் கமல் தொகுத்து வழங்கிய "பிக்பாஸ்-2'-விலும் மும்தாஜ், யாஷிகா ஆனந்த், ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா என அனைவருமே மக்களுக்கு நன்கு தெரிந்த சினிமா பிரபலங்கள். முதல் எபிசோடில் ஓவியா- ஆரவ் இருவருக்குமிடையே லவ்வாகி, பிரேக்காகி, அது பெரிய சர்ச்சையாகி, விஜய் டி.வி.யின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிறவைத்தது.

Advertisment

bb

ஆனால், இப்போது ஆரம்பித்துள்ள "பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் பாதிப்பேர் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் செலக்ட் ஆனவர்கள்போல இருக்கிறார் கள். சாக்ஷி அகர்வால் மட்டுமே கொஞ்சம் முகம் தெரிந்தவராக இருக் கிறார். மற்றபடி அபிராமி வெங்கடாசலம் என்னும் நடிகையை இப்போதுதான் பார்க்கவே முடிகிறது. அதே போல் இலங்கையைச் சேர்ந்த மாடலிலிங்கான லாஸ்வியா யாரென்றே யாருக்கும் தெரியவில்லை. மற்ற அனைவருமே முற்றிலும் புதுமுகங்கள்.

Advertisment

இதனால் முதல் வாரமே நிகழ்ச்சி டல்லடித்ததும் என்ன செய்யலாம் என மண்டையைப் பிய்த்துக்கொண்ட விஜய் டி.வி. திடீரென மாடலிலிங் உலகின் சர்ச்சை நாயகியான மீரா மிதுனை 16-ஆவது போட்டியாளராக "பிக்பாஸ்' வீட்டுக்குள் அனுப்பியிருக்கிறது விஜய் டி.வி. 2016-ல் மீரா மிதுனுக்கு கொடுக்கப்பட்ட "மிஸ் சௌத் இந்தியா' பட்டத்தைப் பறித்து நடிகை சனம் ஷெட்டிக்கு கொடுத்தது அழகிப் போட்டியை நடத்திய அமைப்பு.

இதனால் டென்ஷனான மீரா மிதுன், தனியாக நின்று அழகிப் போட்டியை நடத்தும் வேலைகளில் இறங்கியபோது, பழைய அமைப்பாளர்களால் கடுமையாக மிரட்டப்பட்டார். அவர்களைப் பற்றி மீரா மிதுனும், மீரா மிதுனைப் பற்றி அவர்களும் மாறி மாறி போலீசில் கம்ப்ளெய்டன்ட் பண்ணினார்கள். இப்போது "பிக்பாஸ் 'வீட்டிற்குள் இருக்கும் தர்ஷனின் கேர்ள் ஃப்ரண்ட்தான் சனம் ஷெட்டி.

bb

அதேபோல் அபிராமி வெங்கடாசலமும் "மிஸ் சௌத் இந்தியா' பட்டம் வென்றவர். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து, "பிக்பாஸ்' வீட்டிற்குள் கலாட்டாவும் களேபரமும் நடக்கும். அதன்மூலம் டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறும் என்ற பலே திட்டத்துடன் தான் மீரா மிதுனை "பிக்பாஸ்' வீட்டிற்குள் அனுப்பியிருக்கிறது விஜய் டி.வி.

இதில் இன்னொரு கசமுசா சங்கதியும் இருக்கிறது. வீட்டிற்குள் இருக்கும் 16 போட்டியாளர்களில் ஒருவர் ஹோமோ செக்ஸ் பார்ட்டியாம். அந்தப் பார்ட்டியால் எந்த வில்லங்கமும் வந்துருமோ என்ற பீதியில் இருக்கிறார்களாம் மற்ற போட்டியாளர்கள்.

________________

யார் இந்த மீரா மிதுன்?

"எட்டு தோட்டாக்கள்', "தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களில் நடித்தவர் மீரா மிதுன். சென்னையைச் சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்குப்பின் மாடலிங் துறையில் நுழைந்து "மிஸ் சவுத் இந்தியா', "மிஸ் தமிழ்நாடு' உட்பட நான்கு அழகிப் பட்டங்களை வென்றவர். கார்ப்பரேட்கள் கொடிகட்டிப் பறக்கும் மாடலிங் துறையில் தனியாளாக மோதி ஜெயித்தவர். ஐந்து வருடங்களாக மாடலிங் துறையில் கொடிகட்டிப் பறந்தவர்.

cine090719
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe