Advertisment

பெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்!

/idhalgal/cinikkuttu/big-hero-dancing-pangolin-actress

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழச்சியான ஸ்ரீபிரியங்கா, "வந்தா மலை' படத்தின்மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். sripriyangaஅதன்பின் ஒன்றிரண்டு படங்களில் கமிட் ஆனார். ஆனால் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. மெயின் ஹீரோயி னாக நடித்த "கங்காரு'-வும் காலை வாரியதால் ரொம்பவ

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழச்சியான ஸ்ரீபிரியங்கா, "வந்தா மலை' படத்தின்மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். sripriyangaஅதன்பின் ஒன்றிரண்டு படங்களில் கமிட் ஆனார். ஆனால் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. மெயின் ஹீரோயி னாக நடித்த "கங்காரு'-வும் காலை வாரியதால் ரொம்பவே கவலையானார் பிரியங்கா.

Advertisment

விக்ரம்- தமன்னா ஜோடி போட்ட "ஸ்கெட்ச்' படத்தில் தமன்னாவின் தோழியாக படம் முழுக்க வருவார் பிரியங்கா.

Advertisment

ஆனால் ஸ்கெட்சும் குறி தப்பிருச்சு. சுரேஷ் காமாட் சியின் தயாரிப்பு, டைரக்ஷனில் "மிகமிக அவசரம்' படத்தில் பெண் போலீசாக நடித்தார் ஸ்ரீபிரியங்கா. கோலிலிவுட் பிரபலங்கள், போலீஸ் அதிகாரிகள் என அனைவரும் படத்தையும் பிரியங்காவின் நடிப்பையும் ரொம்பவே பாராட்டினார்கள்.

ஆனால் படமோ போணி யாகாமல் பெட்டிக்குள்ளேயே இருக்கிறது. அடுத்ததாக ஒரு பேய்ப்படத்தில் நடித்தார் பிரியங்கா. அந்தப் படத்தின் கதி என்னவென்று நமக்குத் தெரிய வில்லை. என்னடா இது தமிழச்சிக்கு வந்த சோதனை என ரொம்பவே ஏக்கத்தில் மூழ்கிவிட்டார் பிரியங்கா.

பார்த்தார் பிரியங்கா, பெரிய ஹீரோக்கள் யாரும் வாய்க்கலை. வந்தவரை லாபம்னு நினைச்சு, "வீரத்தேவன்' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான, தன்னைவிட நாலு வயது குறைந்த சின்னப் பையன் கௌசிக்குடன் ஜோடிபோட்டு "கங்கனம்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார்.

ஆனா ஸ்ரீபிரியங்காவின் மனசுக்குள் பெரிய ஹீரோ வுடன் நடித்தே தீருவது என்ற கங்கணம் மட்டும் கனன்று கொண்டிருக்காம்.

cine220119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe