பிகில்! விஜய்யை வெறுப்பேற்றிய அட்லீ!

/idhalgal/cinikkuttu/big-attlee-hated-vijay

விஜய்- நயன்தாரா- அட்லீ காம்பினேஷனில், ஏ.ஜி.எஸ். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது "பிகில்.' தீபாவளிக்கு ரிலீசாவதால் இறுதிக்கட்ட படப்பிடிப் பும், மற்ற பணிகளும் விறு விறுப்பாக நடந்து கொண்டி ருக்கின்றன.

vvv

ஆனால், அதைவிட விறுவிறுப்பான காரசார மான நிஜ சண்டைதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பேச்சு. "தெறி', "மெர்சல்', என இரண்டு ஹிட் படங்கள் கொடுத்ததால், மூன்றாவதாக "பிகில்' படத்தையும் டைரக்டர் அட்லீக்கு கொடுத்தார் விஜய்.

விஜய்யை வைத்து முதன் முதலாக படம் பண்ணுவதால், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமும் பட்ஜெட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை. அகோரத்தின் மகள் அர்ச்சனா தான் படத்தயாரிப்பு பணி களை முன்னின்று கவனித்துக் கொண்டார். அதேபோல நிர்வாகத் தயாரிப்பாளரான எஸ்.எம். வெங்கட் மாணிக்க மும் ஷூட்டிங்கிற்குத் தேவை யானவற்றை உடனுக்குடன் செய்துகொடுத்து சுறுசுறுப் பாகப் பணியாற்றினார்.

சென்னைப் புறநகரான நசரத

சென்னைப் புறநகரான நசரத்பேட்டையிலுள்ள ஸ்டுடியோவில் கால் பந்து மைதான செட் பிரம்மாண்டமாக போடப் பட்டு பாதிக்கும் மேற்பட்ட ஷூட்டிங் அங்குதான் நடந்தது. அதேபோல் சாலி கிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோ மற்றும் லேப்பி லும் பெரிய பெரிய செட்டு கள் போடப்பட்டு ஷூட்டிங் கும் நடந்தது.

சரி, இப்ப ஹீரோ விஜய்க்கும் டைரக்டர் அட்லீக்கும் இடையே நடந்த காரசார மோதல் மேட்டருக்கு வருவோம். விஜய்யின் குட்புக்கிலும், நெருங்கிய நட்பு வட்டத்திலும் இருப்பவர் நடிகர் ஸ்ரீமன். கேரக்டர் ரோல்கள் பண்ணுவதில் கெட்டிக்காரர். எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் அன்புடன் பழகி, அவர்களுடன் எப்போதும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார் ஸ்ரீமன்.

இப்படிப்பட்ட ஸ்ரீமனுக்கு "பிகில்' படத்தில் நல்ல கேரக்டர் கொடுக்கும்படி டைரக்டர் அட்லீயிடம் சொல்லிவிட்டு, அட்லீயைப் பார்க்குமாறு ஸ்ரீமனிடமும் கூறியுள்ளார் விஜய். ஸ்ரீமனும் உடனே போய் அட்லீயைப் பார்த்துள்ளார். விஜய்யே சொல்லிட்டாரு, நமக்கு நல்ல மரியாதையும் கேரக்டரும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் ஆசையுடனும் போயுள்ளார் ஸ்ரீமன்.

avav

அட்லீ அலுவலகத்திற்குள் சென்றதும், ரிசப்ஷனில் இருந்தவர்கள் ""உட்காருங்க, சார் வந்துருவாரு'' எனச் சொல்லியிருக்கிறார்கள். சரி, எல்லா ஆபீஸ்லயும் இருக்கும் நடைமுறைதானே என ஸ்ரீமனும் நினைத் துக்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து, ஸ்ரீமனை அழைத்திருக்கிறார் அட்லீ.

விஜய் அனுப்பியதாக ஸ்ரீமன் சொன்னதும், ""அப்படியா?'' என அலட்சியமாகக் கேட்ட அட்லீ, ""சரி, நாளைக்கு ஆடிஷனுக்கு வாங்க, சரிப்பட்டு வந்தா என்ன கேரக்டர் கொடுக்கலாம்கிறதப் பத்தி யோசிக்கிறேன்'' எனச் சொல்லியிருக்கிறார்.

இதைக்கேட்டு நொந்துபோன ஸ்ரீமன், நம்மளால டைரக்டருக்கு எதுக்கு கெட்ட பேருன்னு நினைச்சு விஜய்யிடம் எதுவுமே சொல்லவில்லையாம்.

அட்லீயைப் பார்க்க ஸ்ரீமனை அனுப்பினோமே, ஒரு வாரமாகியும் எந்த தகவலும் இல்லையே என நினைத்த விஜய், ஸ்ரீமனை அழைத்து ""என்னாச்சு'' எனக் கேட்டிருக்கிறார்.

அட்லீயின் ஆடிஷன் விஷயத்தை ஸ்ரீமன் சொன்னதும், கோபம் சுர்ர்ரென ஏறியதாம் விஜய்க்கு.

""உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க? நான் அனுப்பியும் அவருக்கு ஆடிஷன் பண்ணணும்னு சொல்லியிருக்கீங்க. அவ்வளவு பெரிய டைரக்டரா ஆகிட்டீங்களா?'' என சவுண்ட் விட்டிருக்கிறார் விஜய். ""இல்ல சார்... அது வந்து சார்'' சாரி சார்... என அட்லீ சமாதானப் பிட்டைப் போட்டுள் ளார். ஆனாலும் கோபம் அடங்காத விஜய், இரண்டு நாட்கள், "பிகில்' ஷூட்டிங்கிற்கு விசில் ஊதி விட்டாராம்.

ar

விஜய்- அட்லீ விவாகரம் இப்படி என்றால், போட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு எகிறியதால், கண்ணு முழி பிதுங்கிப் போயுள்ளார் களாம் தயாரிப்பாளர்களான கல்பாத்தி அகோரம், அர்ச்சனா, கல்பாத்தி கணேஷ் ஆகியோர்.

இந்த விவகாரம் பத்தி 2019 ஆக. 13 "சினிக்கூத்து' இதழில் பிட்ஸ் பஜார் பகுதியில் எழுதியிருந்தோம். ஏற்கெனவே போட்ட பட்ஜெட் படி, படத்தின் தமிழக விநியோக உரிமையையும் வெளிநாட்டு விநியோக உரிமையையும், விற்று விட்டார் கல்பாத்தி அகோரம். இப்போது பட்ஜெட் எகிறியதால், மீண்டும் விநியோகஸ்தர்களிடம் எப்படி கூடுதலாக பணம் கேட்பது என கைபிசைகிறாராம் கல்பாத்தி.

""பாரம்பரியமிக்க தேனாண்டாள் பிலிம்ஸ் ராதாவையே "மெர்சல்' படம்மூலம் மெர்சலாக்கி யவர் அட்லீ. அந்தப் படத்திற்குப் பின் எந்தப்படமும் தயாரிக்க முடியாத அளவுக்கு கடனில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறார் ராதா. இப்ப "பிகில்' சிக்கலில் மாட்டி யிருக்கிறார் கல்பாத்தி. வட்டிக்கு வாங்காம சொந்தப் பணத்தை வைத்து படம் எடுத்துவரும் அகோரத்தின் நிலைமையும் பரிதாபத்திற்குரியதாகி விடுமோ என கவலையாக இருக்கிறது.

ஏற்கெனவே தமிழ் சினிமா தயாரிப் பாளர்கள் கொஞ்சம் கொஞ்சமா செத்துக் கிட்டிருக்காங்க. இந்த லட்சணத்துல அட்லீ மாதிரியான ஆட்களால, நிலைமை இன்னும் மோசமாப் போகப்போகுது'' என கவலையுடன் நம்மிடம் பேசினார் அந்த சீனியர் தயாரிப்பாளர்.

-ஈ.பா. பரமேஷ்வரன்

cine270819
இதையும் படியுங்கள்
Subscribe