ரஜினியுடன் நடித்த "கபாலி'-க்குப்பின் தமிழில் ராதிகா ஆப்தே நடிக்கும் படம் "சித்திரம் பேசுதடி-2'.
"முரண்' படத்தை டைரக்ட் பண்ணிய ராஜன் மாதவ்தான் இப்படத்தின் டைரக்டர். விதார்த், அஜ்மல், "ஆடுகளம்' நரேன், காயத்ரி, நிவேதிதா, ப்ரியா பானர்ஜி என நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கிறது. ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன் பேனரில், எல்.வி. ஸ்ரீகாந்த் லட்சுமணன் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
சினிமாவில் இருக்கும்வரை ஒருகை பார்த்துவிடுவது என துணிச்சலுடன் களத்தில் இறங்கிவிட்டார் ஓவியா. "90 எம்.எல்.' (கரெக்டாத்தான் பேர் வச்சிருக்காயங்க.) படத்தில் தம், சரக்கு பழக்கமுள்ள பியூட்டி பார்லர் லேடியாகக் கலக்கியிருக்காராம். "குளிர் 100 டிகிரி' படத்தை டைரக்ட் பண்ணிய அனிதா உதுப்தான் "90 எம்.எல்.லி'-லி ன் டைரக்டர்.
தீரன் அதிகாரம் ஒன்று', "குக்கூ', "ராஜபாட்டை' படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சமீர், டைரக்டராக புரமோஷனாகிவிட்டார். "ஹிப் ஹாப் தமிழா' ஆதியை வைத்து டைரக்ட் பண்ணும் முயற்சியில் இறங்கியிருக்கார் சமீர்.
மச்சினிச்சியின், அதாங்க ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவின் திருமணத் திற்காக "அசுரன்' படப்பிற்கு சின்ன பிரேக் விட்டிருந்தார் தனுஷ். சௌந்தர்யா- விசாகன் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்துவிட்டதால், நெல்லை மாவட்டம் கடம்பூர் மலையில் "அசுரன்' ஷூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் டைரக்டர் வெற்றிமாறன்.
ஏகப்பட்ட கடன் நெருக்கடியால், முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. ஆளும்கட்சியில் சேர்ந்தும் எதிர்பார்த்தது கிடைக்காததால், சென்னை வளசரவாக்கத்தில் தான் ஆசை ஆசையாகக் கட்டிய பாலா- அமீர் இல்லத்தை விற்றுவிட்டாராம் கருப்பு.
பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த கீதா என்பவர், விஜய்வசந்த்- "அட்டக்கத்தி' நந்திதா ஜோடியில் வடசென்னை குப்பத்து ஏரியாவை மையமாக வைத்து தனியாக படம் பண்ணி வந்தார். ஃபைனான்ஸ் பிரச்சினையால், பாதியோடு நிற்கிறதாம் படம்.
சமுத்திரகனியை வைத்து "வெள்ளை யானை' படத்தை டைரக்ட் பண்ணிவந்த சுப்ரமணிய சிவா, தொடர்ந்து படத்தை எடுக்கலாமா அல்லது அப்படியே கிடப்பில் போட்டுவிடலாமா என இரண்டு யோசனையில் உள்ளாராம்.
விஷால்- ராஷி கண்ணா- பார்த்திபன் காம்பினேஷனில் "அயோக்கியா' படத்தை டைரக்ட் பண்ணி வருகிறார் வெங்கட் மோகன். வில்லன் பார்த்திபனுடன் ஹீரோ விஷால் மோதும் செம சண்டைக் காட்சிக்காக சாலிலிகிராமத்தில் இருக்கும் மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் போட்டிருக்கிறார்கள்.
சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதால், சூரிக்கு வரும் வாய்ப்புகள் எல்லாம் ரோபோ சங்கருக்குப் போகிறதாம். ""என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை'' என புலம்பிக் கொண்டிருக்காராம் சூரி.
ஜீவாவை வைத்து "தெனாவெட்டு' படத்தை டைரக்ட் பண்ணிய வி.வி. கதிர், சசிகுமாரிடம் ஒரு கதை சொன்னா ராம். "இந்தா பண்ணிரலாம், உடனே பண்ணிரலாம்' என போக்கு காட்டிய சசிகுமார், இப்ப என்னடான்னா "நீங்களே ஒரு புரொடியூசரை புடிச்சிட்டு வாங்க'ன்னு டேக்கா கொடுத்துட்டாராம். நொந்துபோன கதிர் தெலுங்குப் படம் ஒன்றின் ரீமேக்கிற்காகத் தயாரிப்பாளர் ஒருவரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம்.
நீண்டபல வருட இடைவெளிக்குப்பின் படம் தயாரிக்கப் போகிறது ஏ.வி.எம் நிறுவனம். சொன்ன தேதிக்குள், போட்ட பட்ஜெட்டுக்குள் படம் எடுப்பவர் ஹரி என்பதால், அவரிடம் பேசியிருக்கிறார் ஏ.வி.எம் சரவணன். ஹரி- சூர்யா காம்பினேஷனில் படம் பற்றிய அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்கிறது ஏ.வி.எம் தரப்பு.
தன்னைவிட பத்து வயது குறைந்த அமெரிக்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா சோப்ரா. தனது காதல் மனைவிக்காக 47 கோடி ரூபாயில் அமெரிக்காவில் வீடு வாங்கிக் கொடுத்தார் நிக். இப்ப மேட்டர் அதில்ல, அமெரிக்க டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை இல்லாமல் பிரியங்கா சோப்ரா காட்சி அளித்து கிளுகிளுப்பு ஏற்றியிருந்ததுதான் இப்ப ஹாட் மேட்டரே.
அஜித்- சிவா வெற்றிக்கூட்டணியில் பொங்கலுக்கு ரிலீசான "விஸ்வாசம்' தாறுமாறு ஹிட் அடித்தது. விஸ்வாசத்தை "ஜகா மல்லா' என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்து ரிலீஸ் பண்ணும் வேலையில் இருக்காராம் சத்யஜோதி தியாகராஜன்.
சுந்தர் சி.- குஷ்பு தம்பதிகளின் மூத்த மகள் அனந்திட்டா, தனது தோழி ஒருவருடன் இணைந்து, ஆன்லைனில் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கம்பெனி ஒன்றை ஸ்டார்ட் பண்ணியிருக்காராம். இளம் வயதிலேயே தனது மகள் தொழிலதிபரானதை நினைத்து பூரிப்பில் இருக்காராம் அம்மா குஷ்பு.