Advertisment

இருக்கு; ஆனா இல்ல...

/idhalgal/cinikkuttu/be

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவான பிரபாஸும், ஹீரோயினான அனுஷ்கா வும் ரொம்ப நாளாகக் காதலித்துக்கொண்டே இருந்தார்கள். வழக்கம்போல் சினிமா பிரபலங்கள் சொல்லும் ""நாங்கள் இருவரும் நல்ல நண்பர் கள், எங்களுக்குள் காதல் இல்லை'' என்ற பல்லவியை அனுஷ்காவும் பிரபாஸும் பாடி வந்தார்கள். (குறிப்பாக அதிகம் பாடியது பிரபாஸ் தான்). மூன்று வருடங் களுக்கும் மேலாக "பாக

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவான பிரபாஸும், ஹீரோயினான அனுஷ்கா வும் ரொம்ப நாளாகக் காதலித்துக்கொண்டே இருந்தார்கள். வழக்கம்போல் சினிமா பிரபலங்கள் சொல்லும் ""நாங்கள் இருவரும் நல்ல நண்பர் கள், எங்களுக்குள் காதல் இல்லை'' என்ற பல்லவியை அனுஷ்காவும் பிரபாஸும் பாடி வந்தார்கள். (குறிப்பாக அதிகம் பாடியது பிரபாஸ் தான்). மூன்று வருடங் களுக்கும் மேலாக "பாகுபலி' தயாரிப்பில் இருந்தபோது, மேற்படி இருவரின் காதலும் ஸ்ட்ராங்கானது. "பாகுபலி' ரிலீசுக்குப்பின், கண்டிப்பாக கல்யாணம் தான் என எல்லாரும் நினைத்துக்கொண்டிருந்த போது, அனுஷ்காவின் ஆசையில் மண் அள்ளிப் போட்டார் பிரபாஸ்.

Advertisment

aaஅனுஷ்காவைத் திருமணம் செய்துகொள்ள பிரபாஸின் பெற்றோர் சம்மதிக் காததால், லவ் பிரேக்-அப் ஆனது.

Advertisment

இதனால் கடுப்பான அனுஷ்காவின் பெற்றோர் கள் ""அவர் ஒருத்தர் தானா உலகத்துல ஆம்பளை? எங்க பிள்ளைக்கு எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை பார்க்குறோம் பாருங்க'' என சவால் விட்டார்கள்.

ஆனால், கெட்ட நேரம்- அனுஷ்கா விற்கு ஏத்த, பொருத்தமான மாப்பிள்ளை இதுவரை கிடைக்காதது தான் ரொம்ப சோகம்.

anu

இந்த நேரம் பார்த்து தனது திருவாய் மலர்ந்திருக்கி றார் பிரபாஸ். ""நானும் அனுஷும் பதினோரு வருஷமா நண்பர்களாகத் தான் இருக்கிறோம் (ஆரம்பிச்சுட்டாய்ங்களா). எங்களுக்குள் காதல் இருந்தால் அதை ஏன் மறைக்கணும்.? (நீ பாட்டுக்கு போட்டுத் தாக்கு ராசா). எங்க ரெண்டுபேரில் யாருக்காவது (தனித்தனியாத்தான்) கல்யாணம் நடக்கும்வரை காதல் வதந்தியைக் கிளப்பிக்கொண்டேதான் இருப்பார்கள். அனுஷ்கா மிகமிக அழகான பெண்! தேவசேனாவாக நடித்த தேவலோகத்து அழகி! நானும் அவரும் லவ் பண்றோம்னு ஓடிக்கிட்டிருக்கும் வதந்தியை எப்படி ஸ்டாப் பண்றதுன்னு தெரியல...'' இப்படியெல்லாம் சமீபத்தில் உளறிக் கொட்டியிருக்கார் பிரபாஸ்.

பெண் பாவம் பொல்லாதது ராசா. அதுலயும் மிக அழகான பெண் பாவம் ரொம்ப ரொம்ப பொல்லாதது. அம்புட்டுத் தான் சொல்ல முடியும்! ரிலீசுக்குக் காத்திருக்கும் "நிசப்தம்' படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கார் அனுஷ்கா.

-பரமு

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe