வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக "அமைதிப்படை-2', "கங்காரு' என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது "மிக மிக அவசரம்' படத்தைத் தயாரித்துள்ளதுடன், இந்தப் படத்தின்மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தி லும் நடித்துள்ளனர்.
இயக்குநரும், "நாம் தமிழர் கட்சி'யின் ஒருங்கிணைப் பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். "புதிய கீதை', "கோடம்பாக்கம்', "ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/priyanka_8.jpg)
முதன்முறையாக இயக்குநராக மாறியுள்ள சுரேஷ் காமாட்சி காவலர்களின் வலியை அறிந்து இந்த "மிக மிக அவசரம்' படத்தினை தயாரித்து, டைரக்ட் பண்ணியுள்ளார். ""காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் ஆகியவற்றில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கின்றன.
அதிலும் பெண் காவலர்கள் "மிக மிக அவசரம்' படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையைத்தான் பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். அதற் கேற்றபடி, காவல்துறை உயரதிகாரிகளே இப்படத்தைப் பெண் காவலர்களுக்கு திரையிட்டுக் காட்டச் செய்தார்கள்.
அந்தவிதமாகக் காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்கிறேன்'' என்கிறார் சுரேஷ் காமாட்சி.
"மிக மிக அவசரம்' அக். 11-ஆம் தேதி திரைக்கு வருகிறது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திர சேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.
படம் தயாரித்து முடித்து இரண்டு வருடங்களுக்குமேலாகியும் ரிலீசாகாமல் இருந்ததால், ஹீரோயின் ஸ்ரீபிரியங்கா ரொம்பவே கவலையில் இருந்தார். அக். 11 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதும் ""ஐ ஆம் வெரி வெரி ஹேப்பி. இனிமேல் எனது சினிமா கேரியர் ஸ்ட்ராங்'' என துள்ளிக்குதிக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10/priyanka-t.jpg)