சின்னத்திரைமூலம் கோடிக்கணக் கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் "ஓ மை கடவுளே' படம்வழியாக வெள்ளித் திரையில் அறிமுகமாகிறார். சினிமா என்ட்ரி குறித்து நடிகை வாணி போஜன் என்ன சொல் றாருன்னா....
""பெரிய திரையில் என் பயணத் தைத் தொடங்கியபிறகு, மிகவும் கவன மாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து, தேர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்துவருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக் குப்பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக, எனக்கு மிகப்பெரும் ஆசிர்வாதமாக "ஓ மை கடவுளே' படம் அமைந்திருக்கிறது. காதல் கதைகளுக் கென்றே ஒரு வடிவம் இருக்கும். .ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையைப் புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார். மேலும் இப்படம் பேசும் தார்மீக தத்துவ நியாயங்கள் என்னை இப்படம் நோக்கி வெகுவாக ஈர்த்தது. இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகுகாலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வின் பார்வையை மாற்றித்தரும் பெரு விருந்து. அசோக் செல்வனின் மிகச் சிறந்த, அர்ப்பணிப்புமிக்க நடிப்பு இப்படத்திற்குப்பிறகு வெகுவாகப் பேசப்படும். இப்படத்திற்குப் பிறகு அவர் பெரும் உயரங்களுக்குச் செல்வார். ரித்திகாசிங்கின் துடிப் பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும் குடியிருக்கச் செய்யும்'' என்கிறார்.