ஸ்ரீ அண்ணாமலை யார் மூவிஸ் சார்பில் சி. மாதையன் தயாரிக்கும் புதிய படம் "பேட்டரி.'

Advertisment

மணிபாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் "அசுரன்' படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.

Advertisment

படம் பற்றி இயக்குநர் மணிபாரதி என்ன சொல்றாருன்னா...

bb

""உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து, வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்.

அப்படி வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட்ட மருத்துவத்துறையிலேயே முறைகடு நடந்தால், அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்.

அப்படி மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை நெஞ்சை பதைபதைக்கவைக்கும் காட்சிகளாகப் படமாக்கியுள்ளோம்'' என்றார்.

படத்தில் ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது.