கிராமத்து ஏழை விவசாயி யான விக்ராந்த், விவசாயம் செய்ய வங்கியில் லோன் கேட்கிறார்.

Advertisment

அந்த நிலத்தில் ""விவசாயம் செய்யப் போவதற்கான அடையாளமாக பம்பு செட் போட்டு ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிங்க. அதைப் பார்த்து விட்டு லோன் தருகிறேன்'' என்கிறார் வங்கி மேனேஜர். பம்பு செட் போடுவதற்காக ஊரில் இருக்கும் பணக்கார முஸ்லிமி டம் ஒரு லட்ச ரூபாய் கடன் கேட்கிறார் விக்ராந்த்.

bakhrid

இவர் கடன் கேட் டுப்போன நேரம், பக்ரீத் பண்டிகைக் காக ராஜஸ்தானிலிருந்து பெரிய ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் வருகிறது. குட்டி ஒட்ட கத்தைப் பார்த்து டென்ஷனாகி றார் பணக்காரர். அதை மீண்டும் ராஜஸ்தானுக்கே கொண்டுபோய் விட்டும்படி சொன்னதும், விக்ராந்த் அந்த ஒட்டகத்தை தனது வீட்டுக்கு கொண்டு போவதாகச் சொன்னதும், சரி என்ற முஸ்லிம் ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, அடுத்த பக்ரீத் திற்கு திருப்பித் தந்தால் போதும் என பெரிய மனதுடன் சொல்லிவிடுகிறார்.

விக்ராந்தின் மனைவி (வசுந்தரா)வும் குழந்தையும் அந்த ஒட்டகத்தின்மீது பாசமழை பொழிகிறார்கள். ஒரு கட்டத்தில் ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கே கொண்டுபோய்விடும் நிலை. ஒட்டகத்துடன் விக்ராந்த் பயணிக் கும் பாசப் பயணம்தான் "பக்ரீத்.' படத்தின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்தி னாலும் பின்பகுதியில் இதயத்தை கனமாக்கிவிடுகிறார் டைரக்டர் ஜெகதீசன் சுபு.

விக்ராந்தின் கேரியரில் முக்கியமான படம் இது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி யாகியிருக் கும் வசுந்தரா கிராமத்து ஏழைக் குடும்பத்தலைவியாக பாந்தமாக வருகிறார். ராஜஸ்தான் போகும்வழியில் கலவரம் பண்ணும் மதக் காவலர்களை நச்சென அடையாளப்படுத்தி யிருக்கிறார் டைரக்டர்.

ஆர்ப்பாட்டமில்லாத நல்ல படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் எம்.எஸ். முருகராஜின் தைரியத்தைப் பாராட்டலாம்.