Advertisment

அய்யப்பனும் கோஷியும்

/idhalgal/cinikkuttu/ayyappan-and-koshy

ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும்' என்ற மலையாளத் திரைப்படம் விமர் சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரும்வெற்றி அடைந்துள்ளது. "அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள தயாரிப் பா

ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும்' என்ற மலையாளத் திரைப்படம் விமர் சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரும்வெற்றி அடைந்துள்ளது. "அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள தயாரிப் பாளர் 5 ஸ்டார் கதிரேசன் கூறும்போது...

Advertisment

a

""மிகச்சாதாரண சினிமா ரசிகன் போலவே இந்தப்படம் பார்த்து நானும் பிரமித்துபோனேன். அரிதிலும் அரிதாக, வெகுசில திரைப்படங்களே தொடக்கம் முதல் முடிவுவரை அனைத்து அம்சங் களும் பொருந்திவந்து நம்மை முழுதாக பரவசப்படுத்தும். படத்தின் திரைக்கதை, கதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணிகளம், அழகாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விதம், அனைத்தையும் தாண்டி கதையை தாங்கும், ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பிரமிப்பான நடிப்பு, இவையனைத்தும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சி என்றாலும் இப்போது மிகப்பெரும் பொறுப்புணர்வு உருவாகியிருக்கிறது. இப்படத்தை அதன் சாரம் கெடாமல், தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு, மலையாளப்பதிப்பின் மதிப்பு கெட்டுவிடாமல், ரீமேக் செய்யவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. தமிழின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் தமிழ் பதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்'' என்றார்.

Advertisment
cini310320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe