Advertisment

APP-களின் அப்போசிட் பக்கம்! -அக்ஷராவின் Awarness!

/idhalgal/cinikkuttu/awareness-akshara

ந்தியாவின் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி (OTI) தளமான ZEE5-ல், ஏற்கெனவே வெளியாகி வெற்றியடைந்த தமிழ் தொடர்களான "திரவம்,' "ஆட்டோ சங்கர்' ஆகியவற்றை தொடர்ந்து, "ஃபிங்கர்டிப்' எனும் த்ரில்லர் தொடர் வருகின்ற 21-ஆம் தேதி முதல் வெளியாகிறது. விஷ்ணுவர்தன் தயாரிப் பில், சிவாகர் இயக்கத்தில், 5 எபிசோடுகளைக் கொண்ட இந்த சமூக ஊடக த

ந்தியாவின் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி (OTI) தளமான ZEE5-ல், ஏற்கெனவே வெளியாகி வெற்றியடைந்த தமிழ் தொடர்களான "திரவம்,' "ஆட்டோ சங்கர்' ஆகியவற்றை தொடர்ந்து, "ஃபிங்கர்டிப்' எனும் த்ரில்லர் தொடர் வருகின்ற 21-ஆம் தேதி முதல் வெளியாகிறது. விஷ்ணுவர்தன் தயாரிப் பில், சிவாகர் இயக்கத்தில், 5 எபிசோடுகளைக் கொண்ட இந்த சமூக ஊடக த்ரில்லர் தொடரில், அக்ஷரா ஹாசன், அஷ்வின் காகுமனு, காயத்ரி, சுனைனா, மதுசூதன் ராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் பிரத்யேகமாக ZEE5 தளத்தில் வெளியாகிறது.

Advertisment

Akshara

"ஃபிங்கர்த்டிப்' எனும் இத்தொடர், ஒரு ஸ்வைப் அல்லது ஒரு சமூக வலை தள பதிவு எப்படி ஒரு பயனாளரின் வாழ்க்கை யைப் புரட்டிப் போட்டுவிடக்கூடும் என்பதை யும், அவர்களது சௌகரியங்களைவிட்டு நகர்த்தி, ஒரு தாளமுடியாத சமூக அழுத்தத்தை அவர்கள் மேல் திணித்து விடுகிறது என்பதையும் மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது. ஒவ்வொரு எபிசோடும், நடைமுறையில் நமது பழக்கத்திலுள்ள ஒரு ஆப்புடன் ஒப்பிடக்கூடிய வகையில், கற்பனையான அம்சங்கள் நிறைந்த ஒரு ஆப்பை உருவாக்கி, மனிதனுடைய இருட்டான, எதிர்மறை உணர்வு களான பேராசை, தீராத கோபம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அக்ஷரா ஹாசன் என்ன சொல்றாருன்னா, ""சமூக வலைத்தளங்கள் நமது அன்றாட வாழ்வின் இன்றியமை யாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், அதன் தவறான விளைவுகளைப் பற்றிய அதாவது ஆப்போசிட் பக்கங்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாக இருக்கிறது.'' என்கிறார்.

தொடரின் இயக்குநர் சிவாகர், ""சமூக வலைத்தளத்துடன் அன்றாடம் தொடர்பில் இருக்கும் நாம் அனைவருமே அதனுடைய எண்ணிலடங்கா நன்மைகளை அனுபவித்து வருகிறோம். ஆயினும் அதன் ஊடுருவும் தன்மையும், ஆளுமையும் சில எதிர்மறை பயன்களையும் கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு கதைதான் ஃபிங்கர் டிப்'' என்கிறார்.

Advertisment
cini100919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe