"பூ'ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம் "நெடுநல்வாடை.'
Innovatie Film Acadamy( IFA) சார்பில் பெங்களூரில் நடந்த, 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட சர்வதேச திரைப்பட விழாவில் "நெடுநல்வாடை' கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது .
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/award_2.jpg)
விருது கிடைத்த மகிழ்ச்சி யில் இயக்குநர் செல்வக் கண்ணன் விழாவில் பேசிய போது..
""ரொம்பப் பெருமையா இருக்கு. பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குநர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னால் எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. எங்களை அங்கீ கரித்த Innovatie Film Acadamy ( IFA)- க்கு ரொம்ப நன்றி.
எங்கள் படத்தைப் பரிந்துரைத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி.
தமிழ் சினிமாத் துறையில் உருவான முதல் Crowd Funding திரைப்படம் "நெடுநல்வாடை'. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தைத் தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/award-t.jpg)