லைக்கு மொழி அவசியமில்லை என்பதை மீண்டு மொருமுறை நிரூபித்திருக்கிறார் தமிழ் நடிகர் மணி.

Advertisment

கன்னடத்தில் வெளியான "தேசி' படம்மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய மணி தொடர்ந்து பெங்காலி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துவருகிறார்.

Advertisment

award

கன்னடத்தில் நடித்து வெற்றிபெற்ற முதல் தமிழன் மணி என்பது குறிப்பிடத்தக்கது.

பல மொழிகளில் நடித்த அவரை இந்திய நடிகர் என அறிவித்து, இந்திய அரசு உயரிய விருதான பரம்ஸ்ரீ விருதை 2016-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிக் கௌரவித்தது.

Advertisment

2014 -ஆம் ஆண்டு மத்திய அரசு கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுலிகருக்கு National Excellence Award வழங்கிக் கௌரவித்தது.

அப்போது பல மொழிகளில் நடித்ததற்காக மணிக்கும் அந்த விருது வழங்கப் பட்டது என்பது சிறப்பிற்குரியது.

2014 ஆண்டே மஹாராஷ்டிரா அரசின் "கௌரவ் சம்மான்' விருதையும் பெற்றார்.

அதே ஆண்டு பெங்காலி மொழியில் நடித்த "நிர்மோக்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை யும், பெங்காலி அரசின் "பெங்கால் எக்ஸ்சலன்ஸ்' விருதையும் பெற்றார்.

""ஏ.ஆர்.கே. ராஜராஜா இயக்கும் புதிய படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதிக்கிறேன். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இதை உருவாக்க இருக்கிறார். படப் பிடிப்பு ஜூன் மாதம் துவங்க உள்ளது'' என்றார் நடிகர் மணி.