மிழில் "காதலில் விழுந்தேன்' படத்தின்மூலம் அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு பல நல்ல படங்களில் நடித்தாலும், அவருக்கான தனித்த இடம் ஒன்றை அவரால் பிடிக்கவே முடியவில்லை. இப்போது உதயநிதி ஸ்டாலிலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், "காளி'யில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Advertisment

sunaina

"" "நாக்கு முக்கா' பாடலுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனிக்கு இவ்வளவு நடிக்க வருமா என்று ஆச்சர்யப்பட்டேன். அவர் ஒரு இசையமைப்பாளர் என்பதையே இப்போது மறந்துவிட்டேன்'' எனக்கூறும் சுனைனா, ""பெண் தயாரிப்பாளர்கள் நம்மை குழந்தைபோல பார்த்துக்கொள்வார்கள். ஒரு பெண்ணாக நாம் பாதுகாப்பாகவும், வசதியாகவும் செட்களில் உணர அவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்’'' என தெரிவித்துள்ளார்.