வி.பி. விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயானி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது "எழுமின்.'

Advertisment

குழந்தைகளின் தற்காப்புக்கலை களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

elumeen

பத்திரிகையாளர்களாலும் பெரிய நட்சத்திரங்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பூரிலுள்ள விகாஷ் வித்யாலயா பள்ளியின் தாளாளர், தனது பள்ளியில் பயிலும் சுமார் 1,000 மாணவ- மாணவிகளை திருப்பூரிலுள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் இத்திரைப்படத்தைக் காண ஏற்பாடு செய்தார்.

""தற்காப்புக்கலையின் முக்கியத் துவத்தையும் அதன் அவசியத்தை யும் இப்படத்தின்மூலம் தெரிந்து கொண்டோம்'' என்று படத்தினைப் பார்த்த மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும், பல மாவட்டங்களில், பல பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவியருக்கு இத்திரைப்படத்தை சிறப்புக் காட்சி திரையிட அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகங் களிடம் கேட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.பி. விஜி கூறுகிறார்.