Advertisment

அவதார்-ன் தமிழ்ப் பொங்கல்!

/idhalgal/cinikkuttu/avatars-tamil-pongal

லக சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் "அவதார்.' ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிக் குவித்த இப்படம் ரசிகர் களை பிரமிக்கவும், ஆச்சரியப் படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால்பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்களை தமிழ்சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்

லக சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் "அவதார்.' ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிக் குவித்த இப்படம் ரசிகர் களை பிரமிக்கவும், ஆச்சரியப் படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால்பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்களை தமிழ்சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது.

Advertisment

avataar

ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் மலேசிய நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நரேன் பிரனியாஸ் ஆர் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது.

இப்படத்தில்தான் "அவதார்' படத்தில் நடித்த நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுபோக, இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் முக்கியமான ஒருவர் நடிப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சஸ்பென்ஸ்களுக்கான விடைகளை ஜனவரி 13-ஆம் தேதி லண்டனைத் தொடர்ந்து, 26-ந் தேதி சென்னையிலும் வெளியிட இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மரியா ஜெரால்டு இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்தைப் பார்ப்பவர்களுக்கு திரில்லர் அனுபவத் தைத் தரும் வகையில் இருக்கும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்கவுள்ளது.

இந்தியா, நேபாளம், வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

cini210120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe