Advertisment

கவர்ச்சியும் வளர்ச்சியும்! 90 எம்.எல் கிர்ர்ர்...

/idhalgal/cinikkuttu/attractive-growth-90-ml-cry

"அந்தமாதிரி விஷயங்களை இப்போது அலசி ஆராயவேண்டிய அவசியம் என்ன?' இந்த ஆராய்ச்சியா னது, ஆதாம்- ஏவாள் காலத்தி லேயே தொடங்கப் பட்டு, இன்னும் நீடித்தபடியே உள்ளது.

Advertisment

90ML

ஆண்களுக்கு உறுத்தும்!

""90 எம்.எல்.

அப்படி ஒன்றும் மோசமான படமல்ல..'' என்று நம்மிடம் கருத்து சொன்ன கல்லூரி மாணவி சைலபுத்திரி, ""இதற்குமுன் வந்த பல சினிமாக் களிலும் ஆண் கதாபாத்திரத்துக்கு ஒரு பிரச்சினை என்றால், நண்பர்கள் ஒன்று கூடி தண்ணியடித்து, கண்டதையும் பேசி, நண்பனைச் சமாதானப் படுத்தி, பிரச்சினைக்கும் தீர்வு காண்பார்கள்.

Advertisment

அதையேதான், இந்தப் படத்தில் பெண்கள் பண்ணுகிறார்கள். படத்தில் வரும் ஐந்து பெண்களுக்கும் ஐந்துவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. இவை, பொதுவாக பெண்களுக்கு வரும் பிரச்சினைகள்தான். படத்தில் சைக்கியாட்ரிஸ்ட் ஆக

"அந்தமாதிரி விஷயங்களை இப்போது அலசி ஆராயவேண்டிய அவசியம் என்ன?' இந்த ஆராய்ச்சியா னது, ஆதாம்- ஏவாள் காலத்தி லேயே தொடங்கப் பட்டு, இன்னும் நீடித்தபடியே உள்ளது.

Advertisment

90ML

ஆண்களுக்கு உறுத்தும்!

""90 எம்.எல்.

அப்படி ஒன்றும் மோசமான படமல்ல..'' என்று நம்மிடம் கருத்து சொன்ன கல்லூரி மாணவி சைலபுத்திரி, ""இதற்குமுன் வந்த பல சினிமாக் களிலும் ஆண் கதாபாத்திரத்துக்கு ஒரு பிரச்சினை என்றால், நண்பர்கள் ஒன்று கூடி தண்ணியடித்து, கண்டதையும் பேசி, நண்பனைச் சமாதானப் படுத்தி, பிரச்சினைக்கும் தீர்வு காண்பார்கள்.

Advertisment

அதையேதான், இந்தப் படத்தில் பெண்கள் பண்ணுகிறார்கள். படத்தில் வரும் ஐந்து பெண்களுக்கும் ஐந்துவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. இவை, பொதுவாக பெண்களுக்கு வரும் பிரச்சினைகள்தான். படத்தில் சைக்கியாட்ரிஸ்ட் ஆக ஒரு பெண் வருகிறார்.

jampu

அவரும்கூட, இதுபோன்ற நட்பு தனக்கு அமைய வில்லையே என்று ஏக்கமாகத்தான் பார்க்கி றார். பெண்களுக்கு வரும் இயல்பான பிரச்சினைகளை மிகைப்படுத்திக் காட்டியிருக்கின்றனர்.

பெண்கள் என்றாலே குடும்பப் பொறுப்பு உள்ளவர்கள். அவர்கள் இப்படி பண்ணலாமா என்பதே பொதுவான பார்வையாக இருக்கிறது. ஆனாலும், ஆண்கள்போலவே, பெண்களுக் கும் மனதில் எல்லா ஆசைகளும் உண்டு. ரியல் லைஃபில், அதையெல்லாம் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் பெண்கள். இந்தப் படத்திலோ, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், ஆசைகளையும், கோபத்தையும் அவரவர் இஷ்டத்துக்கு வெளிப்படுத்துகி றார்கள். இதுதான் ஆண்களை உறுத்துகிறது. இதுவும்கூட ஒருவிதத்தில் ஆணாதிக்க மனோ பாவம்தான். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், "90 எம்.எல்.' சினிமா குறிப்பாகப் பெண்கள் பார்க்க வேண்டிய படம்'' என போட்டுத்தாக்கினார்.

கர்ணன் காட்டாத கவர்ச்சியா?

"90 எம்.எல்.' சினிமா ஏற்படுத்தி யிருக்கும் சர்ச்சை குறித்து நம்மிடம் பேசிய அந்தக்கால சினிமா ரசிகரான கார்த்திகேயன்' ""இந்த அழகிய அசுரா எம்மாத்திரம்? கவர்ச்சி காட்டி ரசிகர் கூட்டத்தை இழுக்கிறதுல பெரிய பெரிய ஜாம்பவானெல்லாம் இதே தமிழ் ஃபீல்டில் இருந்திருக்காங்க. எம். கர்ணன்னு ஒரு டைரக்டர். ஒளிப்பதிவு மேதைன்னு அவரைச் சொல்லுவாங்க. அவர் வைக்கிற கேமரா கோணம் கவர்ச்சியை ரொம்ப தூக்கலா காமிக் கும். 1970-ல அவரு எடுத்த முதல் படம் "காலம் வெல்லும்' என சிலிர்த்து நின்று அவர் பாடிய கர்ண புராணம் இது- "காலம் வெல்லும்' திரைப் படத்தில் "எல்லா ரும் திருடர்களே..ஒரு பெண்ணைப் பார்க்கும்போது’ என்று பாடல்களில் மட்டுமே கவர்ச்சி காட்டிய கர்ணன், இரண்டாவது படமான "கங்கா' வில் பெண்களிடம் கொள்ளையர்கள் அத்துமீறி நடக்கும் காட்சியிலும், ஆற்றில் ஹீரோயின் ராஜ்மல்கா குதிரையைக் குளிப்பாட்டும் காட்சியிலும் அநியாயத்துக்கு கவர்ச்சியைத் திணித்தார். இத்தனைக் கும் இந்த இரண்டும் "யு' சர்டிபிகேட் படங்களே. அடுத்து அவர் இயக்கிய "ஜக்கம்மா' பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஏனென் றால், ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு கவர்ச்சி காட்சிகள் அதில் இல்லை. அடுத்து ஈஸ்ட்மென் கலரில் "எங்கள் பாட்டன் சொத்து' என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தில்தான் முதன்முதலில், கடற்கரையில் ரேப் சீன் வைத்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இன்றுவரையிலும் பேசப்படும் கவர்ச்சிப்படம் என்றால், அது கர்ணனின் இயக்கத்தில் வெளிவந்த "ஜம்பு'தான். 1970-ல் ஆரம்பித்த கர்ணனின் கலைப்பயணம், 1989-ல் வெளிவந்த "ரெட்டைக்குழல் துப்பாக்கி' வரை கவர்ச்சி கரமாக தொடர்ந்தது'' என்றார்.

kr

மேலும், ""கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் அந்தமாதிரி காட்சிகள் வரும்போது, ரசிகர்கள் சத்தமில்லாமல் பார்த்து ரசித்தார் கள். காலம் மாறிவிட்டது. இப்போது, செல்போன்லயே இன்டர்நெட் வச்சிக்கிட்டு, எல்லா கருமத்தையும் பார்த்துத் தொலைக்கிறாங்க. அதனால தான், வேற லெவல்ல யோசிச்சு "90 எம்.எல்.' மாதிரி படம் எடுக்கிறாங்க. டபுள் மீனிங் வசனம்போய், டைரக்டாவே ஏ சமாச்சாரத்தை சினிமாவுல பேசுறாங்க. அந்தமாதிரி ஒரு படம்தான் "90 எம்.எல்.' '' என்றார்.

1944-ல் வெளிவந்து மூன்று தீபாவளிகளைக் கண்ட திரைப்படம் எம்.கே. தியாகராஜர் நடித்த "ஹரிதாஸ்.' மன்மதலீலையை வென்றார் உண்டோ என, 75 ஆண்டு களுக்கு முன்பே கேள்வி எழுப்பி, இன்றுவரையிலும் விடைதேடியபடியே இருக்கிறது தமிழ் சினிமா!

cin260319
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe