Advertisment

அதிகார மையங்களில் தமிழ் வேண்டும்' -கவிஞர் வைரமுத்து

/idhalgal/cinikkuttu/ataikaara-maaiyanakalaila-tamaila-vaenatauma-kavainara-vaairamautatau

vairamuthu

"தமிழாற்றுப்படை' வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர்நீதிமன்றஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் முன்னிலை வகித்தார்.

Advertisment

தொடக்கவுரையில் கவிஞர் வைரமுத்து பேசியபோது, ""மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறுகொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம்தான் இந்தத் "தமிழாற்றுப்படை'.

Advertisment

seeman-barathiraja

சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் ஆற்றுப்படை இ

vairamuthu

"தமிழாற்றுப்படை' வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர்நீதிமன்றஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் முன்னிலை வகித்தார்.

Advertisment

தொடக்கவுரையில் கவிஞர் வைரமுத்து பேசியபோது, ""மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறுகொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம்தான் இந்தத் "தமிழாற்றுப்படை'.

Advertisment

seeman-barathiraja

சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் என்று பொருள். பக்தர்களை முருகனை நோக்கி ஆற்றுப்படுத்தும் இலக்கியத்திற்குத் திருமுருகாற்றுப்படை என்று பெயர். அந்த அடிப்படையில் புதிய தலை முறையைத் தமிழை நோக்கி ஆற்றுப்படுத்தும் ஆய்வுக்கட்டுரைகள் என்பதனால் இதற்குத் "தமிழாற்றுப்படை' என்று தலைப்பிட்டேன்.

திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - கம்பர் - அப்பர் - திருமூலர் - வள்ளலார் - உ.வே.சாமிநாத அய்யர் - பாரதியார் - பாரதிதாசன் - புதுமைப்பித்தன் - கண்ணதாசன் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற வரிசையில் 13-ஆம் கட்டுரையாகத் "தமிழை ஆண்டாள்' என்று ஆண்டாளை எழுதினேன். 14-ஆம் ஆளுமையாக மறைமலையடிகளை ஆய்வுசெய்து இப்போது அரங்கேற்றுகிறேன்.

தமிழை முன்னிறுத்துவதும் தமிழ் மொழியைப் புதுப்பிப்பதுமான தேவை இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் மிகுந்திருக்கிறது. மொழியை வெறும் ஒலிக்கூட்டமென்றோ, கருத்து விளக்கக் கருவியென்றோ கருதிவிடமுடியாது. இந்தியா போன்ற கூட்டுக்கலாசாரமுள்ள ஒரு நாட்டில் மொழி என்பது ஓர் இனத்தின் அதிகாரம் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

உறங்கிக்கிடந்த தமிழுணர்வும் இன உணர்வும் அண்மையில் உயிர்த்துடிப்போடு எழுந்து நிற்பதுகண்டு தமிழ்ச்சமூகம் சிலிர்த்து நிற்கிறது. ஒரு மொழி பெருமையும் உரிமையும் பெறவேண்டும் என்றால் அதிகார மையங்களில் அது நின்று நிலவவேண்டும். மாநில அரசு அலுவலகங்களில் - தமிழ்நாட்டுக்குள் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் - நீதிமன்றங்களில் - கல்விக்கூடங்களில் - ஊடகங்களில் - ஓர் இனத்தின் அன்றாடப் பேச்சுவழக்கில் அது தொடர்ந்து நிலைபெற வேண்டும்.

vairamuthu

நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ் திகழவேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு.

ஆதிவரலாற்றிலிருந்து ஆரம்பித்தால் தமிழர்களின் மொழிபேசும் எல்லை சுருங்கியே வந்திருக்கிறது. தமிழர்களின் ஆதிநிலமான லெமூரியாக் கண்டம் மடகாஸ்கர்வரை நீண்டுகிடந்தது. அது கடற்கோளில் மூழ்கிப்போனபிறகு சிந்துச் சமவெளிவரைக்கும் தமிழ்க்கலாசாரம் பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. திராவிட மொழிக் குடும்பம் தோன்றுவதற்குமுன் தென்னிந்தியா முழுக்கத் தமிழ் பரவியிருந்தது. இன்று தென்னிந்தியாவில் ஒரு பகுதியாக வெறும் 1,30,058 சதுர கிலோமீட்டராகச் சுருங்கியிருக்கிறது. இது மேலும் சுருங்குவதற்குத் தமிழ் சம்மதிக்காது; தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் தமிழ் உணர்வு மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.'' என உணர்ச்சிப்பிழம்பாக வெடித்தார் கவிப்பேரரசு.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe