Advertisment

"அத' சொல்லாதேன்னு மிரட்டுனாரு! ஹீரோயின் ஸ்டேட்மென்ட்!

/idhalgal/cinikkuttu/ata-caolalaataenanau-mairatataunaarau-haiiraoyaina-sataetamaenata

ந்தக் காலத்து ரேவதி, அம்பிகா, ராதாவிலிலிருந்து இப்போதைய நயன்தாரா, மஹிமா நம்பியார் வரை கேரள பூமியிலிலிருந்து ஹீரோயின் கிளிகள் இறக்குமதி ஆகிக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் லேட்டஸ்டாக இறக்குமதியான- கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கண்டு கொண்டிருப்பவர் "சாட்டை' மகிமா. அதன்பின் "மொசக்குட்டி', நல்ல பேர் வாங்கிக

ந்தக் காலத்து ரேவதி, அம்பிகா, ராதாவிலிலிருந்து இப்போதைய நயன்தாரா, மஹிமா நம்பியார் வரை கேரள பூமியிலிலிருந்து ஹீரோயின் கிளிகள் இறக்குமதி ஆகிக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் லேட்டஸ்டாக இறக்குமதியான- கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கண்டு கொண்டிருப்பவர் "சாட்டை' மகிமா. அதன்பின் "மொசக்குட்டி', நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது. வரிசையாக, "குற்றன் 23', "புரியாத புதிர்', "கொடிவீரன்' என கமிட் ஆனார் மகிமா.

Advertisment

இப்போது அருள்நிதியுடன் நடித்துக்கொண்டிருக்கும் "இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஷூட்டிங்கில் இருந்த மகிமாவைச் சந்தித்தோம்.

Advertisment

magima

""இந்தப் படம் எனது சினிமா கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். அருள்நிதி சார் தவிர, அஜ்மலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பத்திரிகையாளர் மு. மாறன் சார்தான் டைரக்ட் பண்ணுகிறார். சின்ன வயசுலயிருந்தே சினிமாமீது ரொம்ப ஆசை என்றாலும் நடிக்கணும்னு யோசிச்சதேயில்லை. ஏன்னா எனக்கு படிப்புதான் முக்கியம்.

மலையாளத்துல சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சேன், அவ்வளவுதான். அதைப் பார்த்துட்டுத்தான் டைரக்டர் அன்பழகன் சார், "சாட்டை' படத்தின் ஆடிஷனுக்குக் கூப்பிட்டார்.

போனேன், செலக்ட் ஆகிட்டேன். அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சதும் படிப்பை கன்டினியூ பண்ணப் போயிட்டேன். "சாட்டை'-யில் எனக்கு ஆசிரியராக நடித்த சமுத்திரக்கனி சார் டைரக்ட் பண்ணியிருக்கும் "கிட்ணா'-வில் நடிச்சிருக்கேன்.

"""கிட்ணா'-வில் உங்களுக்கு என்ன கேரக்டர் என நாம் கேட்டது தான் தாமதம், "அய்யய்யோ வேணாம்ங்க. அதப்பத்தி யார்ட்டயும் சொல்லக்கூடாதுன்னு சமுத்திரக்கனி சார் அன்பாக பயமுறுத்தி வச்சிருக்காரு. இந்தப் படத்துல எனக்கு ரெட்டை வேஷம். அதமட்டும்தான் என்னால சொல்லமுடியும். நன்றி வணக்கம் சார்'' என உஷாராகப் பேசினார் மகிமா.

-ஈ.பா. பரமேஷ்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe