Advertisment

அசுரன்! -விமர்சனம்

/idhalgal/cinikkuttu/asuran-review

முதலாவது காட்சித் துண்டிலேயே ஆரம்பித்துவிடுகிறது சூடு. துவக்கம்முதல் இறுதிவரை கொந்தளிப்பு அடங்கிவிடாமல் படத் தைக் கொண்டுபோயிருக்கிறார் வெற்றி மாறன். முதலாவது காட்சித் துண்டி னைக் கண்டுகொண்டிருக்கும் பார்வையாளருக்கு, காட்சித்துண்டின் இறுதியில் காத்திருக்கிறதொரு வியப்பு திகீர் என்று எகிறிக்கொண்டே போகிறது உச்சத்தை நோக்கி. இந்தப் பயணத்தை இசைப் படிமங் களாக்கி, எழுத்துப்போட்டு முடிவதற் குள் கடத்திவிடுகிறார் ஜி.வி. பிரகாஷ். எழுத்துப் போடும்போதே எதிர்பார்ப்பை உண்டுபண்ணிவிடுகிறது ஜி.வி.யின் பின்னணி இசை. போர் முழக்கமென எக்காளமாகத் துவங்குகிறது சாக்ஸ் போனின் ஊதோசை. பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தொடர்ந்து வருகிற சொல்லாட்சி. "துந்துபி முழங்க', இந்தச் சொற்றொடருள் உறங்கிக் கொண்டிருக்கிற பழந்த

முதலாவது காட்சித் துண்டிலேயே ஆரம்பித்துவிடுகிறது சூடு. துவக்கம்முதல் இறுதிவரை கொந்தளிப்பு அடங்கிவிடாமல் படத் தைக் கொண்டுபோயிருக்கிறார் வெற்றி மாறன். முதலாவது காட்சித் துண்டி னைக் கண்டுகொண்டிருக்கும் பார்வையாளருக்கு, காட்சித்துண்டின் இறுதியில் காத்திருக்கிறதொரு வியப்பு திகீர் என்று எகிறிக்கொண்டே போகிறது உச்சத்தை நோக்கி. இந்தப் பயணத்தை இசைப் படிமங் களாக்கி, எழுத்துப்போட்டு முடிவதற் குள் கடத்திவிடுகிறார் ஜி.வி. பிரகாஷ். எழுத்துப் போடும்போதே எதிர்பார்ப்பை உண்டுபண்ணிவிடுகிறது ஜி.வி.யின் பின்னணி இசை. போர் முழக்கமென எக்காளமாகத் துவங்குகிறது சாக்ஸ் போனின் ஊதோசை. பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தொடர்ந்து வருகிற சொல்லாட்சி. "துந்துபி முழங்க', இந்தச் சொற்றொடருள் உறங்கிக் கொண்டிருக்கிற பழந்தமிழரின் புறநானூற்றுக் கால நினைவு களை மீட்டெடுப்பதுபோல் அமைந்திருக்கிறது எழுத்திசை கலையாமல் நிலைத்து நீடிக்கிற தாளக்கட்டுகளில் தாவித்தாவிப் பயணிக்கிறது இசைக் கோர்வை.

Advertisment

aaa

இசையோட்டத்தின் வழியே ஜி.வி. உருவாக்கித் தந்திருக்கிற இந்தத் திகீர் அனுபவத்தை, தனது திரைக் கட்டுமானத்தின் வழியே கடத்துகிறார் வெற்றிமாறன். இங்கிலாந்தில் பிறந்து உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் (ஙண்ந்ங் ஞப்க்ச்ண்ங்ப்க்) கம்பீரமான இசையில், அசுரப் பறவையின் சிறகுகளின் மீதமர்ந்து உயரே உயரே ஏறி ஏறிப் பயணிப்பதானதொரு அனுபவம் கிட்டுமே. அதைத் தருகிறார் ஜி.வி.

கண்ணுக்கு விருந்தளிக்கிற ஒளிப்பதிவும் மெச்சத் தகுந்த தாகத்தான் இருக்கிறது. ஒளிப்பதி வாளர் வேல்ராஜின் பல சிறப்பு களுள் ஒன்று- இரவில் நடப்பதாகத் திரைக்கதையில் அமைந்திருக்கிற காட்சிகளுக்கு உகந்தவாறு இருட்டில் படம் பிடிப்பது. வெற்றிமாறனின் முதல் திரைப்படமான "பொல்லாதவன்' தொடங்கி, "ஆடுகளம்', "விசாரணை', "வடசென்னை' ஆகிய அனைத்துத் திரைப்படங்களிலும் தனித்த பண்புகளுடன் கதைக்கு உயிரூட்டிய இருட்டு, "அசுரனி'லும் தொடர்கிறது. வெற்றிமாறனின் படங்களில் தொடர்ந்து வருகிற இரவு நேரக் காட்சிகள் கொந்துணர்ச்சி கொண்டவை.

அச்சம், வஞ்சனை, சூழ்ச்சி, தாக்குதல், தற்காப்பு, துரத்துதல், ஓடுதல், பதுங்குதல், பாய்தல், சந்துபொந்துகள், வெட்டவெளிகள், ஆயுதங்கள், ரத்தம், கொலை, பழிவாங்குதல், மன்னித்தல், கடந்த காலத்தைத் திறந்து பார்த்தல், முரட்டு நம்பிக்கை, நம்பிக் கெடுதல், நம்பிக் கெடுத்தல், குற்றவுலகத்தின் விழுமியங்கள், குற்றவுலகத்தின் அன்பு, குற்றவுலகத்தின் ஈசம்... இப்படி, தொடர்ந்து வருகிற "இரவுக் கூறுகளை'க் காணலாம். இருட்டை வெற்றிமாறன் கதையாக்குகிற முறைமை தனித்துவமானது. வெற்றிமாறனின் வெவ்வேறு இருட்டுகளை வேறுபடுத் திக் காட்டியிருப்பவர் வெல்ராஜ் குறிப்பாக இரவுக் காட்சிக்கும் பகல் காட்சிக்குமான வேறுபாடு- பகலவன்.

பகல் காட்சிகளில் முதன்மையான ஒளி விளக்கென்பது சூரியன். உள்ளரங்கக் காட்சிகளைப் படமாக்கும்பொழுது ஏதாவதொரு சாளரத்தின் திசையிலிருந்தோ, கதவுக்கு வெளிப்புறமிருந்தோ, முற்றத்தின்மேல் திறப்பிலிருந்தோ "சூரிய ஒளி வருகிறதாக' நம்பிக்கை உண்டு பண்ணுமளவு, முதன்மை ஒளிக் கான அமைவிடத்தைத் தேர்வுசெய்து கொள்ளும் சுதந்திரம் உண்டு. இரவுக் காட்சிகளில் இயற்கையான முதன்மை ஒளி இல்லை. நிலா வெளிச்சத்தில் நடக்கும் நிகழ்வு என்று காட்சி அமைக் கப்பட்டிருந்தால் ஒழிய, இயற்கையின் முதன்மை ஒளி என்ற கருத்தாக்கம் செல்லுபடியாகாது. குறிப்பாக, வெளிப்புறக் காட்சிகளில், பகல் நேர காட்சிகளைவிட இரவு நேரக் காட்சிகள் சவாலானவை.

இந்தச் சவால்களை விரும்பியவாறு மின்னல் வேகத்தில் படப்பிடிப்பித் தளத் தில் ஒளிப்பதிவு செய்துள்ளார் வேல்ராஜ்.

மஞ்சு வாரியரின் நடிப்புக்கு ஈடு கொடுத்து, "அசுரன்' கதாபாத்திரத்தில் பயணித்துள்ளார் தனுஷ். சண்டைக் காட்சிகளை, மூங்கில் கூடையைப் பின்னுவதுபோல அருமையாக அமைத்துள்ளார் பீட்டர் ஹைன். பிரகாஷ்ராஜ் வழக்கறிஞராக வரும்காட்சி அழுத்தமாக உள்ளது. இப்படத்தில் பத்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். ஒரு மாஸ் ஹீரோவை வைத்து, சுவையான படத்தை வெற்றிமாறன் உருவாக்கியுள்ளார்.

-தங்கம் (எ) தங்கவேலன்

(இயக்குநர் பாலுமகேந்திராவிடம்

இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர்)

Advertisment
cini151019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe