Advertisment

அசுரன் மகா சீட்டிங் மஞ்சு வாரியர்!

/idhalgal/cinikkuttu/asuran-megha-cheating-manju-warrior

ம்ம நாகர்கோவிலில் பிறந்து, வளர்ந்து மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருப்பவர் மஞ்சு வாரியர். இப்போது 41 வயதாகும் மஞ்சு வாரியர், தனது 17-ஆவது வயதில் "சாக்ஷம்' என்ற படம்மூலம் 1995-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார். வசீகரமான முக வெட்டு, உடல் அமைப்பு, சிறந்த நடிப்பு ஆகியவற்றால் மலையாள திரையுலகில் மளமள வென வளர்ந்தார். மம்முட்டி, மோகன்லால், திலீப், குஞ்சாகோ கோபன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டார்.

Advertisment

mm

சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, 1998-ஆம் ஆண்டு நடிகர் திலீப்பை திடீரென திருமணம் செய்துகொண்டார். இந்த சினிமா தம்பதிக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு மீனாட்சி என பெயரிட்டனர். பெண் குழந்தை பிறந்து ஐந்து வயதுவரை சினிமாவிலிருந்து சற்றே ஒதுங்கி யிருந்த மஞ்சு வாரி யர் அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித் தார். திலீப்பும் பர பரப்பான ஹீரோ ஆனார்.

சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த திலீப்- மஞ்சு வாரியர் குடும்ப வாழ்க்கையில் குறுக்கே புகுந்தார் காவ்யா மாதவன். இந்த காவ்யா மாதவனும் திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர்தான். காவ்யாவின் என்ட்ரியா

ம்ம நாகர்கோவிலில் பிறந்து, வளர்ந்து மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருப்பவர் மஞ்சு வாரியர். இப்போது 41 வயதாகும் மஞ்சு வாரியர், தனது 17-ஆவது வயதில் "சாக்ஷம்' என்ற படம்மூலம் 1995-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார். வசீகரமான முக வெட்டு, உடல் அமைப்பு, சிறந்த நடிப்பு ஆகியவற்றால் மலையாள திரையுலகில் மளமள வென வளர்ந்தார். மம்முட்டி, மோகன்லால், திலீப், குஞ்சாகோ கோபன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டார்.

Advertisment

mm

சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, 1998-ஆம் ஆண்டு நடிகர் திலீப்பை திடீரென திருமணம் செய்துகொண்டார். இந்த சினிமா தம்பதிக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு மீனாட்சி என பெயரிட்டனர். பெண் குழந்தை பிறந்து ஐந்து வயதுவரை சினிமாவிலிருந்து சற்றே ஒதுங்கி யிருந்த மஞ்சு வாரி யர் அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித் தார். திலீப்பும் பர பரப்பான ஹீரோ ஆனார்.

சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த திலீப்- மஞ்சு வாரியர் குடும்ப வாழ்க்கையில் குறுக்கே புகுந்தார் காவ்யா மாதவன். இந்த காவ்யா மாதவனும் திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர்தான். காவ்யாவின் என்ட்ரியால் திலீப்- மஞ்சு வாரியர் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் 2014-ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்தார் மஞ்சு வாரியர். 2015-ல் விவாகரத்து கிடைத்தது.

Advertisment

mmm

விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியுடனும், திருமண வயதில் இருக்கும் மகள் மீனாட்சியின் நல்லாசியுடனும் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார் திலீப். இந்த நிலையில்தான், தமிழில் "ஓவியம்' என அர்த்தம்வரும் படத்தில் அறிமுகமான மலை யாள நடிகையை கூலிலிப்படையை வைத்து காரில் கடத்தினார் திலீப். கூலிலிப்படையினரோ அந்த நடிகைமீது சபலம் தட்டி, வெறியுடன் காரிலேயே பாலிலியல் பலாத்காரம் செய்தனர்.

அந்த நடிகையை திலீப் கடத்தச் சொன்னதற்கு ஒரு பின்னணியும் இருக்கிறது. மஞ்சு வாரியருடன் குடும்பம் நடத்திக்கொண்டே காவ்யா மாதவனுடன் திலீப் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தார். மேற்படி இருவரும் எந்த இடத்தில் சந்திக்கிறார்கள், எந்த ஓட்டலிலில் கும்மாளம் போடுகி றார்கள் என்பதை ஆதாரத்துடன் மஞ்சு வாரியருக்குச் சொன்னது அந்த ஓவிய நடிகைதான். அந்த ஆதாரங்களின் அடிப்படை யில்தான் விவாகரத்திற்கு விண்ணப்பம் போட்டார் மஞ்சு வாரியர்.

mm

ஃப்ளாஷ் பேக் ஓவர்...

கூலிப்படையினர் நடிகையைப் படாய்ப்படுத்திய விவகாரத்தில் திலீப்பை கைது செய்தனர் கேரள போலீசார். ""மாட்னாண்டி மாப்ள'' ddaஎன்ற சந்தோஷத்துடன் திலீப்பிற்கு எதிராகக் களத்தில் குதித்தார் மஞ்சு வாரியர். "காமக் கொடூரன் திலீப்பை வெளியில் விடக்கூடாது' என கேரள பெண்கள் அமைப்பும் வரிந்துகட்டியது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் போன்றவர்களின் ஆதரவு இருந்தும், அவ்வளவு ஈஸியாக திலீப்பால் வெளியில் வரமுடியவில்லை.

ஜாமின் வாங்குவதற் குள் திலீப்பிற்கு நாக்கு தள்ளிவிட்டது. இப்போது ஜாமினில் இருந்தாலும், நடிகையை பாலியல் பலாத் காரம் செய்த வழக்கில் முதல் குற்றவாளி திலீப்தான்.

அந்த இரண்டு ஃப்ளாஷ் பேக்கும் ஓவர்...

இப்ப மஞ்சு வாரியர் மேட்டருக்கு வருவோம். திலீப் விவகாரத்தால் பெரும் புகழை சம்பாத்த மஞ்சு வாரியர் அப்போது திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது கேரள மாநிலம்வயநாடு எம்.பி. தொகுதியில் (இப்போது அத்தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி) பரக்குனி என்கிற ஆதிவாசி காலனி உள்ளது. 52 ஆதிவாசி குடும்பங்கள், மழை பெய்தால் ஒழுகும் கூரை வீடுகளில் கடுமையான தொற்று நோய்களுடன் வாழ்ந்து வருபவர்கள்.

அந்த மக்களுக்கு வீடுகட்டித் தருவதற்காக கேரள அரசின் "பெண்கள் சக்தி' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் பிராண்ட் அம் பாசிடராக நியமிக்கப்பட்டார் மஞ்சு வாரியர். அவரை நியமனம் செய்து நடந்தவிழாவில், ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்டித்தர இரண்டு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார் மஞ்சு வாரியர்.

வருடங்கள் சில உருண் டோடிவிட்டன. ஆனால் மஞ்சு வாரியர் கொடுப்பதாகச் சொன்ன இரண்டு கோடி ரூபாயைக் கொடுக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக கேரளாவை புரட்டிப் போட்டுவரும் மழை வெள்ளத்தால், பரக்குனி ஆதிவாசிகளின் நிலைமை இன்னும் படுமோசமாகியது. கேரளாவின் மற்ற ஏரியாக்களில் மழை வெள்ளத் தால் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது கேரள அரசு. "பெண்கள் சக்தி' திட்டத்தின்கீழ் மஞ்சு வாரியர் இரண்டு கோடி ரூபாய் கொடுத்ததாக நினைத்து பரக்குனி மக்களை கேரள அரசும் கைவிட்டுவிட்டது. தொண்டு நிறுவனங்களும் உதவி செய்யவில்லை.

அலைந்து திரிந்து அரசாங்கத் திடம் கோரிக்கை வைத்த ஆதிவாசி களின் கதறல் மஞ்சு வாரியரின் செவிகளில் விழவில்லை. கடைசியில் சில நல்லோர்களின் உதவியுடன் நீதிமன்றப் படியேறினார்கள் ஆதிவாசிகள். நீதிமன்றம் கேள்வி கேட்டதும், ""என்னிடம் இரண்டு கோடி ரூபாய் இல்லை. பத்து லட்சம்தான் இருக்கிறது, அதை தருகிறேன்'' என்றார் மஞ்சு வாரியர். நொந்து நொம்பலமாகிவிட்டார்கள் பரக்குனி ஆதிவாசி மக்கள்.

இதையெல்லாம் தொடர்ச்சியாக கவனித்து அந்த மக்களின் பரிதாப நிலையை jjjவீடியோவாக வெளியே கொண்டு வந்துவிட்டார் மாத்யூ சாமுவேல். இங்கே நம்ம தமிழ் நாட்டின் கொட நாடு கொலை விவகாரத்தின் பின்னணியை வீடியோ வாக்கு மூலங்களாக அம்பலப்படுத்தி யவர் தான் மாத்யூ சாமுவேல்.

""அவள் எங்களை ஏமாற்றி விட்டாள்'' வீடியோவில் அந்த ஆதிவாசி மக்கள் கதறுவது கல்நெஞ்சையும் கரைத்துவிடும்.

ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத மஞ்சு வாரியர், மலையாளத்தில் சந்தோஷ் சிவன், பிரியதர்ஷன், பிரித்விராஜ் ஆகியோரது படங்களில் செம பிஸியாக இருக்கி றார். வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி தமிழில் முதன்முறையாக தனுஷுடன் மஞ்சு வாரியர் ஜோடி போடும் "அசுரன்' படம் ரிலீசாகிறது. அந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் வெற்றிமாறன், ""நடிப்பு ராட்சசி'' என மஞ்சு வாரியரை புகழ்ந்தார்.

வெற்றிமாறன் சொன்னது கரெக்ட்தானே!

-பிரகாஷ் & பரமேஷ்

cini011019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe