"ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்' வி.ஜி. ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ் பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குநர் பூபதி ராஜா இயக்கத்தில், ஜெய்வந்த் நடிக்கும் படம் "அசால்ட் & ஃபால்ட்'.
"மத்திய சென்னை', "காட்டுப்பய சார் இந்த காளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜெய்வந்த், இப்படத்தைத் தயாரித்து, நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
ஜெய்வந்துடன் முக்கிய வேடங்களில் சரவணன், சென்றாயன், ராமர், கோதண்டம் நடிக்க, அவர்களுடன் சோனா, ரிஷா, தேவி, நாகு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜேஷ் குமார் சந ஒளிப்பதிவு செய்ய, அருண் கல்லுமூடு கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்றிருக்கிறார். "ய2' புகழ் விஜய் & விக்கி இசையமைக்க, மெட்ராஸ் மீரான், துப்பாக்கிஸ் மற்றும் பூபதி பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
எஸ்.பி. ராஜா சேதுபதி & ஆர். சத்தியமூர்த்தி படத்தொகுப்பை கவனிக்க, டான்ஸ் மாஸ்டராக பூபதி பொறுப்பேற்க, டான் அஷோக் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்