யூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்ருதிஹாசன். "டிரெட்ஸ்டோன்' என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ss

இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர்.

Advertisment

இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி, நீரா படேல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாபாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்துக்கொண்டே மறைமுகமாகக் கொலையாளியாகவும் உலவும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் ஜெரிமி ஐர்வின்‌, பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி மற்றும் டிரேஸி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டுமில்லாமல் உலகயளவில் இசையிலும் தனது அழுத்தமான பதிவை பதிவு செய்யும் அசாத்திய கலைஞராக இருக்கிறார்.

Advertisment

லண்டனில் இசைக்குப் பெயர் பெற்ற பல மேடைகளிலும், சபைகளிலும் அவர் பாடியுள்ளார். தனது முதல் இசை ஆல்பத்தை வெளியிடுவதில் மும்முரம் காட்டிவரும் ஸ்ருதிஹாசன் "லாபம்' படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.