புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார் ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகி ஜன. 3-ஆம் தேதி ரிலீசாகவுள்ள "அவனே ஸ்ரீமன்நாராயணா' ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம். புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரித்த ம
புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார் ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகி ஜன. 3-ஆம் தேதி ரிலீசாகவுள்ள "அவனே ஸ்ரீமன்நாராயணா' ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம். புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரித்த முதல் படம் "கோதி பன்னா சாதாரண மைகட்டு.' அவர் தயாரித்த "கிரீக் பார்ட்டி', "ஹம்பிள் பாலிடீசியன்', "நோக்கராஜ்', "கதையொந்து ஷுருவாகிதே', "ஜீர்ஜிம்பே' ஆகிய அனைத்தும் மகத்தான வெற்றிப்படங்கள். குறிப்பாக "கிரீக் பார்ட்டி' கன்னடத் திரையுலக வரலாற்றில் வசூலில் சாதனை படைத்த சில குறிப்பிட படங்களில் ஒன்று. ஏ.எஸ்.என். படத்திற்கு கதை எழுதி யிருப்பவர்கள் மிகச்சிறந்த செயல்திறன் படைத்தவர்களான "தி செவன் ஆட்ஸ்' எனும் குழு. இக்குழு ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின் (இயக்குநர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது.
இப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு நகைச்சுவை காவலராக நடிக்க, அவருடன் இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான வழிப்பறித் திருட்டுக் கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல் வாதியையும் சமாளித்து, அந்த மர்மத்தை எப்படி தீர்த்துவைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமாகப் படமாக்கியிருக் கிறார்கள்.
இயக்குநர் சச்சின் இப்படத்தின் இயக்கம், படத்தொகுப்பு, மற்றும் விஎப்எக்ஸ் சிறப்புக் காட்சி அமைப்புகள் என மூன்று பொறுப்பு களிலும் திறம்பட செயலாற்றியிருக்கிறார்.
"அவனே ஸ்ரீமன்நாராயணா' படத்தின் தமிழ் டிரைலர், பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது.