Advertisment

ஆர்யா, அதர்வா, ஜீவா, சிவா, விமல் கண்ணன் மேட்டர்ஸ்

/idhalgal/cinikkuttu/arya-andrea-jeeva-siva-vimal-kannan-matters

சென்னை அண்ணா நகரில் தந்தூரி, நாண், ரொட்டி ஐயிட்டங்களுக்கு ஸ்பெஷலான ஓட்டல் திறந்தார் நடிகர் ஆர்யா. சாப்பாட்டுப் பிரியர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் அதே பிராண்ட் ஓட்டலைத் திறக்க முடிவு செய்துள்ளாராம் ஆர்யா. ""ஹீரோவான உங்களுக்கு ஓட்டல் தொழில் தேவையா''ன்னு யாராவ

சென்னை அண்ணா நகரில் தந்தூரி, நாண், ரொட்டி ஐயிட்டங்களுக்கு ஸ்பெஷலான ஓட்டல் திறந்தார் நடிகர் ஆர்யா. சாப்பாட்டுப் பிரியர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் அதே பிராண்ட் ஓட்டலைத் திறக்க முடிவு செய்துள்ளாராம் ஆர்யா. ""ஹீரோவான உங்களுக்கு ஓட்டல் தொழில் தேவையா''ன்னு யாராவது கேட்டா, ""அம்பானியே காய்கறிக்கடை வச்சிருக்காரு, போவியா அங்கிட்டு'' என காமெடியாக பதில் சொல்கிறாராம் ஆர்யா.

Advertisment

vimal

"வா டீல்', "றெக்க' படங்களின் டைரக்டர் சிவா, ஜீவாவை வைத்து அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை டைரக்ட் பண்ணும் முடிவோடு கதை சொல்லியிருக்காராம்.

"ஜெயம்கொண்டான்', "கண்டேன் காதலை' படங்களின் டைரக்டர் கண்ணன், கௌதம் கார்த்திக்கை வைத்து "இவன் தந்திரன்' படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணினார். ஆனால் படத்தின் ரிசல்ட்டால் லேசாக கண்ணீர்விட்டவர், அடுத்ததாக அதர்வாவை வைத்து "பூமராங்' கை தயாரித்து டைரக்ட் பண்ணினார். சமீபத்தில் ரிலீசான அதர்வாவின் "செம போத ஆகாதே'-வும் மண்ணைக் கவ்வியதால், "பூமராங்'கை எப்படி ரிலீஸ் பண்ணுவது? பட்ட கடனை எப்படி அடைப்பது என கண்ணீர் வடிக்கிறாராம் கண்ணன்.

Advertisment

jeeva

"நேற்று இன்று நாளை' படத்தின் டைரக்டர் ரவிக்குமார், அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை டைரக்ட் பண்ணுகிறார்.

சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதால், சென்னைப் புறநகர்ப்பகுதியில் இருக்கும் ஈ.வி.பி. ஸ்டுடியோ வில் பிரம்மாண்ட செட் போடும் வேலைகள் நடக்கிறதாம். அந்த பிரம்மாண்ட செட்டுக்குப் பக்கத்திலேயே சிறிதாக டாஸ்மாக் பார் செட்டும் போடுகிறார்களாம்.

"களவாணி-2'-வில் ஒரு ரகம் என்றால் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' அல்பான்ஸ் ஜில்பான்ஸ்களுடன் வேறொரு ரகமாக தூள்கிளப்பியிருக்காராம் விமல்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe