Advertisment

"அருவா சண்டை'யும் காஸ்ட்யூம் சண்டயும்!

/idhalgal/cinikkuttu/arauvaa-canataaiyauma-kaasatayauma-canatayauma

"சிலந்தி', "ரணதந்த்ரா' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கிவரும் "அருவா சண்ட' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய "ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக...'

"சிலந்தி', "ரணதந்த்ரா' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கிவரும் "அருவா சண்ட' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய "ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக...' என்ற பாடலின் காட்சி சமீபத்தில் கேரளாவிலுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது.

Advertisment

கதாநாயகியின் அறிமுகப் பாடலான இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன், இயக்குநர் கொடுத்த உடைகளை அணியமுடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.

malvika-menon

""இந்தப் பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாகத் தெரியவேண்டு மென்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அப்புறம் என்ன?'' என்று இயக்குநர் ஆதி கேட்க, ""நீங்க சொன்னதைவிட எடுத்த டிரஸ் ரொம்ப சிறியதாக adhirajanஇருக்கிறது. இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை'' என்று மாளவிகா பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்குப் புரியவைக்க முயற்சி செய்தார். கடைசியில் வேறுசில உடைகளை வெட்டி, தைத்துக் காஸ்ட்யூம் அளவைத் தொடைக்குக் கீழே டைரக்டர் ஆதி இறக்கிக் கொடுத்ததும் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி நடனக் குழுவினருடன் செமத்தியாக ஆட்டம் போட்டார். ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் ஏ. ராஜா தயாரித்துவரும் "அருவா சண்ட' திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe