Advertisment

ஏ.ஆர். முருகதாஸ் + விஜய் = "திருட்டு' வெடி!

/idhalgal/cinikkuttu/ar-murugadoss-vijay-theft-explosion

பெரிய ஹீரோ விஜய், பெரிய டைரக் டர் ஏ.ஆர். முருகதாஸ், பெரிய தயாரிப்பு நிறுவனம் "சன் பிக்ஸர்ஸ்' என்கிற பலம் பொருந்திய கூட்டணிக்கு அஞ்சா மல்... ""2007-ஆம் ஆண்டில் தென்னிந்திய திரைப்பட எழுத் தாளர்கள் சங்கத்தில் உதவி இயக்குநர் வருண் பதிவு செய்த "செங்கோல்' கதையும், இப்போது விஜய்யை வைத்து முருகதாஸ் எடுத்திருக்கும் "சர்கார்' கதையும் ஒரே கதைதான்.

Advertisment

vijay-sarkar

தன் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்ட தால் நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை ரத்து செய்ய வைக்கிறான் ஹீரோ. இதனால் அரசியல்வாதி களின் கோபத்திற்கு ஆளாகிறான். இதன் தொடர்ச்சியாக தேர்தலில் நின்று ஜெயிக்கிறான் ஹீரோ. அவனைத் தேடி முதலமைச்சர் வாய்ப்பு வருகிறது. ஹீரோ என்ன முடிவு எடுத்தான் என்பதுதான் "செங்கோ

பெரிய ஹீரோ விஜய், பெரிய டைரக் டர் ஏ.ஆர். முருகதாஸ், பெரிய தயாரிப்பு நிறுவனம் "சன் பிக்ஸர்ஸ்' என்கிற பலம் பொருந்திய கூட்டணிக்கு அஞ்சா மல்... ""2007-ஆம் ஆண்டில் தென்னிந்திய திரைப்பட எழுத் தாளர்கள் சங்கத்தில் உதவி இயக்குநர் வருண் பதிவு செய்த "செங்கோல்' கதையும், இப்போது விஜய்யை வைத்து முருகதாஸ் எடுத்திருக்கும் "சர்கார்' கதையும் ஒரே கதைதான்.

Advertisment

vijay-sarkar

தன் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்ட தால் நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை ரத்து செய்ய வைக்கிறான் ஹீரோ. இதனால் அரசியல்வாதி களின் கோபத்திற்கு ஆளாகிறான். இதன் தொடர்ச்சியாக தேர்தலில் நின்று ஜெயிக்கிறான் ஹீரோ. அவனைத் தேடி முதலமைச்சர் வாய்ப்பு வருகிறது. ஹீரோ என்ன முடிவு எடுத்தான் என்பதுதான் "செங்கோல்' மற்றும் "சர்கார்' கதை'' எனச் சொல்லிலி தெறிக்கவிட்டார் பாக்யராஜ்.

Advertisment

திரைக்கதையில் வேறுமாதிரியான ட்ரீட்மென்ட்டை முருகதாஸ் கொடுத் திருந்தாலும் கதை ஒன்றுதான் என்கிற இந்த உண்மையை வைத்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்தார் வருண். இந்த வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது எழுத்தாளர் சங்கம் சார்பில் பாக்யராஜ் கொடுத்த கடிதம்தான்.

sarkar

வருணுடன் சமரசமாகிவிட்டதாக சன் பிக்ஸர்ஸ் தரப்பிலும், இந்தப் பிரச்சினையில் சமரசம் செய்துகொள்வதாக வருண் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

sarkar

""எங்களுடைய "சர்கார்' படக்கதை வருணு டைய மூலக்கதைதான்'' என வழக்கின்போது ஒப்புக்கொண்டதையடுத்து, "சர்கார்' பட டைட்டிலிலில் "கதை- நன்றி' என வருண் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.

விஜய்யின் "சர்கார்' அமைய தனது "செங்கோலை' தந்துவிட்டதாக வருண் சொல்லி யுள்ளார். இந்த விஷயத்தில் பாக்யராஜ் காட்டிய உறுதிக்கும் நேர்மைக்கும் சல்யூட் அடிக்கிறது திரையுலகம்.

""உசுப்பேத்துறவங்ககிட்ட "உம்'முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட "கம்'முனும் இருந்தா, வாழ்க்கை "ஜம்'முனு இருக்கும்'' என "சர்கார்'’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் விஜய். இது ஒருவகையில் நியாயமான பேச்சுதான்.

ஆனால்...

""தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திர நடிகராக இருக்கும் விஜய், தனது படத்தின் கதை சம்பந்தமான சர்ச்சைகளில்கூட "உம்'முனும், "கம்'முனும் ஜாலிலியா வேடிக்கை பார்ப்பது நல்லாவா இருக்கு? "நான் "மூத்தகுடி' என்ற பெயரில் சென்னை கே.கே.நகர் சிவன் பார்க்கில் வைத்து ஏ.ஆர். முருகதாஸிடம், சொன்ன கதையைத்தான் திருட்டுத்தனமாக "கத்தி' என்ற பெயரில் விஜய்யை வைத்து முருகதாஸ் எடுத்திருக்கார்' என மீஞ்சூர் கோபி என்கிற கோபி நைனார் கதறிய போதுகூட விஜய் "கம்' முனுதான் இருந்தார்.

"விஜய்யின் "சர்கார்' படம் எனது "செங் கோல்' கதையைத் திருடி எடுக்கப்பட்டது. இந்தக் கதையை நான் பல வருடங்களுக்கு முன்பே விஜய்யிடம் சொல்லிலியுள்ளேன்' என உதவி இயக்குநர் வருண் (எ) ராஜேந்திரன் கதறியபோதும் "கம்'முனே இருந்துவிட்டார் விஜய்.

"நான் முதலமைச்சரானால்...' என மேடைகளில் பேசும் விஜய், தனது படம் சம்பந்தமாக வரும் சர்ச்சை யைக்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்பது சரிதானா?

விஜயகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய "ரமணா' படம் வந்தபோது பி. வாசுவிடம் உதவியாளராக இருந்த நந்தகுமார் கதைத் திருட்டு புகார் சொன்னதும், நந்தகுமாரையும், முருகதாஸையும் அழைத்துப்பேசிய விஜயகாந்த், அதில் அடிப்படை உண்மை இருப்பதை அறிந்து, தான் நடித்த "தென்னவன்' படத்தை இயக்கும் வாய்ப்பை நந்தகுமாருக்கு வழங்கினார்.

sarkar

விஜயகாந்த்போல விஜய் கால்ஷீட் தரத்தேவையில்லை. ஆனால் குறைந்த பட்சம் கதையைப் பறிகொடுத்ததாகச் சொல்பவர்களின் குரலை காது கொடுத்து கேட்கலாமே?'' என்கிற கேள்வி பொது வெளியிலும், சினிமாத்துறையிலும் விஜய்யை நோக்கி நீண்டிருக்கிறது.

குமுறிக் கொந்தளித்த வருணின் மணம் குளிரும்படி வெயிட்டாக "கவனித் திருக்கிறது தயாரிப்பு தரப்பு.'

cine131118
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe