Advertisment

இனி பெரிய நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள் -அப்புக்குட்டி!

/idhalgal/cinikkuttu/appukutty

திர் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் "வாழ்க விவசாயி.' அறிமுக இயக்குநர் பி.எல். பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisment

"வாழ்க விவ சாயி' படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளி யிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திர சேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

appu

விழாவில் இயக்குநர் பொன்னி மோகன் பேசுகை யில், என்னுட

திர் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் "வாழ்க விவசாயி.' அறிமுக இயக்குநர் பி.எல். பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisment

"வாழ்க விவ சாயி' படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளி யிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திர சேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

appu

விழாவில் இயக்குநர் பொன்னி மோகன் பேசுகை யில், என்னுடைய சிறியவயதில் ஹீரோ- ஹீரோயினாகத் தெரிந்தவர்கள் விவசாயி கள்தான். அதனால், விவசாயிகளின் பெருமையை எடுத்துரைக்கவேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற் போல் அப்புக்குட்டியும், வசுந்தராவும் அமைந்திருக்கிறார்கள். நான் சிறிய வயதில் நேரில் கண்டதை அப்படியே கண்முன் கொண்டுவந்தார்கள் என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் அழகர்சாமியின் "குதிரை' படத்திற்குப்பிறகு அப்புக்குட்டியைச் சந்திக்கும்போதெல்லாம். சரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டேயிருப்பேன். ஏனெனில், அவர் ஒரு சிறந்த நடிகர். நீண்ட நாட்களுக்குப்பிறகு அப்புக்குட்டி எதார்த்தமாகத் திரையில் தோன்றி யிருக்கிறார். படத்தில் கமர்சியல் அம்சங் கள் இருப்பதால் படம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்.

நடிகை வசுந்தரா

சிறிய பட்ஜெட் படங்களை ஊடகங் கள்தான் சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.

அப்புக்குட்டிக்கு ஜோடியாக இதில் நடித் திருக்கிறேன் என்பதைவிட ஒரு விவசாயிக்கு ஜோடியாக நடித்திருக்கி றேன் என்பதே பொருத்தமானது.

நடிகர் அப்புக்குட்டி

நான் நடித்த படமொன்று மேடை யிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன். நம்பிக்கை யிருக்கிறது. பயப்படாதீர்கள்! ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக் கூடாதா? இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும்போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன். என்கூட நடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன்வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

"அழகர்சாமியின் குதிரை' படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ... அதேபோல் இந்த "வாழ்க விவசாயி' படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்''.

விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் தயாரிப்பாளர் பால் டிப்போ கதிரேசன் வரவேற்றார்.

cini151019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe