சாலைப் பாதுகாப்பு சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் வாங்கியவர் டாக்டர் மாறன். இவர், கதை- திரைக்கதை- வசனம் எழுதி, இயக்கி, தயாரித்த "பச்சை விளக்கு' படம் ஜனவரி 3-ஆம் தேதி ரிலீசானது. சாலை விதிகளை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும், பாதுகாப்பாகப் பயணம் செய்யும் அவசியம் ஆகியவற்றை மிக அழகாகக் காட்சிப்படுத்தி யிருந்தார் மாறன். சாலை பாதுகாப்பை மட்டும் சொன்னால், பாடம் நடத் தியது மாதிரி ஆகிவிடும் என்பதால், லவ் ட்ராக்கையும் வைத்திருந்தார் மாறன்.

Advertisment

இப்படி நல்ல படம் எடுத்த மாறனுக்கு நேர்ந்த கொடுமை என்னன்னா, "பச்சை விளக்கு' படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் மட்டும் அதுவும் சில தியேட்டர் களில் மட்டும் ரிலீசானது.

ff

அதிலும் ரிலீசான சில நாட் களிலேயே படத்தைத் தூக்கிவிட்டார்கள் தியேட்டர் காரர்கள். ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக மீண்டும் தமிழகம் முழுவதும் "பச்சை விளக்கு' படத்தை ரிலீஸ் பண்ணும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் டாக்டர் மாறன்.

ரிலீஸ் அனுபவம் குறித்து டாக்டர் மாறனிடம் நாம் பேசியபோது, ""சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக் கையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. எனது "பச்சை விளக்கு' படத்தைப் பார்த்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் திலகம் கே. பாக்யராஜ், மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, லண்டன் மாநகர மேயர் ஆகியோரெல்லாம் "இந்தப் படம் எல்லோருக்கும் போய்ச் சேரவேண்டிய அவசியமான படம்' என பாராட்டினார்கள். இங்கே பாராட்டு மட்டும் பத்தாது, அதையும் தாண்டி ரிலீஸ் பண்ணும் சாமர்த்தியம் வேண்டும்போல ''என ஆதங்கப்பட்டார்.

-பரமேஷ்