ரஜினியின் பாராட்டு!

/idhalgal/cinikkuttu/appreciate-rajini

rrரீஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர் களே' படத்தின் டீஸரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து விட்டு பாராட்டியது குறித்து இயக்குநர் சஞ்சய் பாரதி, ""கிட்டத்தட்ட ஒரு கனவு ந

rrரீஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர் களே' படத்தின் டீஸரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து விட்டு பாராட்டியது குறித்து இயக்குநர் சஞ்சய் பாரதி, ""கிட்டத்தட்ட ஒரு கனவு நனவானதைப்போலத்தான் இருக்கிறது. எல்லாரையும்போல நானும் தலைவர் ரஜினிகாந்த் சாரின் தீவிர ரசிகன்தான். என் தந்தை சந்தான பாரதி, ரஜினி சாரின் நெருங்கிய நண்பர் என்றாலும், இயக்குநராக எனது பணியை அவர் பார்த்துப் பாராட்டியது என்னால் மறக்க முடியாத தருணம். ஒட்டுமொத்தப் படக்குழுவையும் வெகுவாகப் பாராட்டினார் ரஜினி சார்.

ரஜினி சார் பாராட்டியது வெறும் முகஸ்துதிக்காக அல்ல. நிஜமான ஈடுபாட்டுடன் படத்தைப் பற்றியும், படக்குழுவைப் பற்றியும் கேட்டறிந்தார். மிகுந்த ஆர்வத்து டன் என்னைப் பற்றியும், நான் யாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன் என்றும் கேட்டார்'' என உற்சாகமுடன் சொல்கிறார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில், கோகுலம் கோபாலன் தயாரிக்கும் "தனுசு ராசி நேயர்களே' திரைப் படம் உலகெங்கும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகிறது.

cini101219
இதையும் படியுங்கள்
Subscribe