திருமணத்துக்குப்பிறகு, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார்.
அப்படி நம்பி அவர் தேர்வு செய்த "ஜீரோ' படம் பெரியளவில் கவனம் பெறவில்லை. இதனால், பெரிய கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அனுஷ்கா, சமீபத்திய ட்ரெண்டாக இருக்கும் பயோபிக் வகையறாவைத் தேர்வு செய்திருக் கிறார். அதில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anuksha_1.jpg)
இந்திய கிரிக்கெட் அணியில் 18 ஆண்டுகளாக முக்கியப் பங்கு வகித்துவந்த ஜூலன் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். இந்நிலையில், ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கைப்படத்தில் நடித்துவரும் அனுஷ்கா, ஷூட்டிங்கில் ஜூலனுடன் எடுத்த படத்தையும் வெளியிட்டிருக்கிறார். தனது கணவர் விராட் கோலி கிரிக்கெட் வீரர் என்பதால், அவரிடம் விளையாட்டு நுணுக்கங்களைக் கேட்டுத் தெரிந்து அதற்கேற்றாற்போல் தயாராகிறார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/anuksha-t.jpg)