Advertisment

அஞ்சலியும் இளம் ஹீரோவும்!

/idhalgal/cinikkuttu/anjali-and-young-hero

"ஏமாலி' படம்மூலம் கதாநாயகனாக அறிமுகமான சாம் ஜோன்ஸ் நன்றாக நடிக்கத் தெரிந்த நாயகன் என்ற பெயர் எடுத்தார். அடுத்து "தர்மபிரபு', "லிசா3டி' படங்களில் நடித்துள்ளார். "லிசா'-வில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், "தர்மபிரபு'-வில் ஜனனி ஐயருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

Advertisment

அஞ்சலியுடன்

"ஏமாலி' படம்மூலம் கதாநாயகனாக அறிமுகமான சாம் ஜோன்ஸ் நன்றாக நடிக்கத் தெரிந்த நாயகன் என்ற பெயர் எடுத்தார். அடுத்து "தர்மபிரபு', "லிசா3டி' படங்களில் நடித்துள்ளார். "லிசா'-வில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், "தர்மபிரபு'-வில் ஜனனி ஐயருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

Advertisment

அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்து என்ன சொல்றாருன்னா...

""லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்தபோதே சினிமா ஆர்வம் என்னைப் படிக்கவிடாமல் செய்தது. எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையுடனே கல்லூரிப் படிப்பை முடித்தேன். "ஏமாலி' படத்தின்மூலம் சமுத்திர கனியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.

Advertisment

aa

முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது "லிசா'-வில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.

பெங்களூரிலிருந்து கொடைக் கானலுக்கு இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால், நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்குப் பயிற்சி கொடுத்தார். தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். "தர்மபிரபு'-வில் எமலோகத்தில் யோகி பாபுவும், பூலோகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம்.

நான் சின்ன பையனாக இருப்ப தால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்தது, இரண்டு முன்னணி இயக்குநர்களுடன் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதிபோல் அனைத்து வித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்தி கேயன்போல் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெய்னராகவும் விளங்க வேண்டும் என்பதே என் ஆசை'' என்கிறார் சாம் ஜோன்ஸ்.

cine040619
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe