க்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே. ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர்ராஜா இசையமைப்பில் தயாரான "சிந்துபாத்' படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

Advertisment

anjali

விழாவில் தயாரிப்பாளர் ராஜராஜன் பேசும்போது...

""இரண்டு ஆண்டுகளுக்குமுன் இந்த "சிந்துபாத்'தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குநர் அருண்குமார் தொடங்கி வைத்தார். எங்கள் குழுமீது "மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்குப் படமாக உருவாக்கி இருக்கிறோம். விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது.'' என்றார்.

இயக்குநர் அருண்குமார் பேசுகையில்...

""முதலில் இந்தக் கதையை பல முன்னணி நாயகர்களிடம் சொன்னேன். அவர்கள் யாரும் நடிப்பதற்கு முன்வரவில்லை. இந்நிலையில் மீண்டும் என்னை விஜய் சேதுபதி அழைத்து நாமே இணைந்து பணியாற்றுவோம் எனறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் இதயங்கனிந்த நன்றி! விஜய் சேதுபதியின் மகனான சூர்யா விஜய் சேதுபதி, படம் முழுவதும் வரக்கூடிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.'' என்றார்.

"மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பேசுகையில்...

Advertisment

""சிந்துபாத் நமக்கு எல்லாருக்கும் நன்கு தெரிந்த, அறிமுகமான கணவன்- மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான சுவாரசியமான காரணிகள் இருக்கின்றன.

அதனை விவரித்தால் அதுவே நாளை தலைப்பு செய்தியாகி விடும். அதனால் அதைக் கடந்துவிடுகிறேன். ஒருவனுடைய மனைவியை, ஒரு கும்பல் கடத்திச் சென்று, கடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவனானவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

anjali

Advertisment

இந்தப் படத்தில் அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால்தான் கேட்கும். இது ஒரு சுவாரசியமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கேரக்டர். அவர் இந்த கேரக்டரில் பொருத்தமாக நடித்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை'' என்றார்.

படத்தின் ஹீரோயினான அஞ்சலி இந்த விழாவிற்கு வராமல் ஆப்சென்ட் ஆனாலும், ஹீரோ விஜய்சேதுபதி உட்பட யாருமே அப்செட்டாகவில்லை.