படவுலகில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் புத்தகம் "அனிதா பத்மா பிருந்தா.' 560 பக்கங்கள் கொண்ட
நாவல் இது. இதை எழுதியவர் ஏ.எஸ். சூர்யா என்கிற இளைஞர். படவுலகுடன் தொடர்பு கொண்டிருக்கும் இவர், தான் சந்தித்துப் பழகிய பலரிடமும் தனக்கு உண்டான மறக்கமுடியாத அனுபவங்களையும், இனிய நினைவுகளை யும், கசப்பான உண்மை களையும், மனதில் ஆழமாகப் பதிந்த சம்பவங்களையும், ஆறமுடியாத காயங்களையும் நாவலாக எழுதியிருக்கிறார்.
இந்த புதினத்தை அவரே தன் "பீ பாஸிட்டிவ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார். இதில் ஒரு பிரபல நடிகை, கதாபாத்திரமாக வருகிறார்.
சாதனைகள் படைத்த ஒரு புகழ்பெற்ற திரைப் பட இயக்குநரும் வருகிறார். இவர்கள் தவிர, வேறு பல படவுலக கதாபாத்திரங் களும்கூட இதில் வருகிறார் கள். நாவலை வாசிக்கும் போதே, அவர்கள் யார் என்று நாம் கண்டுபிடித்துவிடலாம்.
ஏ.எல். சூர்யா "அனிதா பத்மா பிருந்தா' நாவலை எழுதியதுடன் நிற்காமல், அதைப் படவுலகில் உள்ள நிறைய பிரபலங்களுக்கு அனுப்பி வைத்தும் இருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/book-t.jpg)