Advertisment
/idhalgal/cinikkuttu/angry-samantha

திருமணத்திற்குப் பிறகும் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்துவரும் நடிகை சமந்தா அதைக் கொண்டாடும்விதமாக தனது காதல் கணவர் நாக சைதன்யாவுடன் ஐரோப்ப

திருமணத்திற்குப் பிறகும் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்துவரும் நடிகை சமந்தா அதைக் கொண்டாடும்விதமாக தனது காதல் கணவர் நாக சைதன்யாவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஜாலியாக ஊர் சுற்றிவந்த இவரின் படுகவர்ச்சியான போட்டோக்களை ட்விட்டரில் சமீபத்தில் வெளியிட்டார். இதையடுத்து இந்தப் படங்களுக்கு பல லட்சத்துக்கு மேற்பட்ட லைக்குகளும், கமெண்டுகளும் வந்தன. ஆனால் கமெண்டுகளில் நாகார்ஜுனாவின் குடும்ப ரசிகர்கள் சமந்தாவைக் கடுமையாக விமர்சித்தனர்.

Advertisment

samantha

இதனால் கடும் கோபமடைந்த சமந்தா, ""இது என்னுடைய வாழ்க்கை. திருமணம் நடந்திருந்தாலும் என் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று நான்தான் முடிவெடுப்பேன். நீங்கள் யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்'' இப்படி கோபத்தில் பதிலடி கொடுத்தார்.

cine161018
இதையும் படியுங்கள்
Subscribe