"பொட்டு' படத்தின் வெற்றிக்குபபிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் "கா' படத்தை மிகப் பிரம்மாண்ட
"பொட்டு' படத்தின் வெற்றிக்குபபிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் "கா' படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவுசெய்யும் "வைல்ட் லைஃப் போடோகிராபர்' கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. சலீம் கோஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
""30 நாட்கள் அடர்ந்த வனப் பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வனத்துறையின் அனுமதிபெற்று படப் பிடிப்பை நடத்தியிருக்கி றோம். திரையில் பார்க்கும்போது மிகவும் பிரம்ப்பாக இருக்கும். எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம்'' என் கிறார் இயக்குநர் நாஞ்சில்.