நம் உடலுக்குச் சக்தி தேவைப்படும்போது சரியான நேரத்திற்கு உணவு உண்டுவிடுகிறோம். அதேபோல அதற்குள் ஒளிந்துகொண்டு அவஸ்தைப்படுகிற ஆன்மா பலம்பெறுவதற்கு சித்தி தரும் மந்திரங்களை நீர், கல், மரம், அக்னி ஆகியவற்றில் பிரயோகப்படுத்தி மீண்டும் அவற்றை ஆன்மாவுக்குள் ஈர்த்துக்கொள்ளவேண்டும்.
கல்லில் சிலைவடித்துக் கடவுளாகச் சித்தரித்து மந்திரங் கள்கூறி பிரார்த்தனை செய்வதற்கு இறைதத்துவம் என்று பெயர். மரத்தில் இறைவனை உருவமாகச் செய்து வழிபடு வதற்குத் தாவர தத்துவம் என்று பெயர். இதை விருக்ஷ தத்துவம் என்றும் கூறுவர். அக்னியில் இறைவனை வர்ணித்து. வணங்கு வதை யக்ஞ தத்துவம் என்பர். நீரில் இறைவனது சக்தியை நிலை நிறுத்தி வழிபட்டு உட்கொள்வதற்கு அமிர்த தத்துவம் என்று பெயர். இந்த அமிர்த தத்துவத்தை விஷ்ணு ஆலயங்களிலும், சில கணபதியின் தலங்களிலும் மட்டுமே கடைப்பிடிக் கின்றனர். இந்த நான்கு தத்துவங்களில் நீர் மட்டுமே நாம் உட்கொள்ளும் மந்திர நீரின்வழியாக ஆன்மாவிற்குள் கலந்து, நமக்கு ஒருவித தெய்வீக பலத்தை ஏற்படுத்திச் செயல்பட வைக்கிறது.
நீருக்கு, வான மண்டலத்திலிலிருந்து பூமியில் விழுந்து பயிர்கள் வளரச் செய்து உயிர்களைக் காப்பதால் அமிர்தம் என்ற புனிதப் பெயர் வந்தது. இதையே நம் சான்றோர்கள் "நீரின்றி அமையாது உலகு' என்று நீரின் அவசியத்தை உணர்த்தினர்.
வாசனை திரவியங்களோடு வில்வம், துளசியிட்டு நீரூற்றி "அமிர்த சஞ்சீவினி' மந்திரத்தை ஜெபம் செய்தால், மரணப்படுக்கையில் கிடப்பவர்கள்கூட எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பர். அதைப்போலவே ஆனைமுகனுக்குரிய அறுகம்புல்
நம் உடலுக்குச் சக்தி தேவைப்படும்போது சரியான நேரத்திற்கு உணவு உண்டுவிடுகிறோம். அதேபோல அதற்குள் ஒளிந்துகொண்டு அவஸ்தைப்படுகிற ஆன்மா பலம்பெறுவதற்கு சித்தி தரும் மந்திரங்களை நீர், கல், மரம், அக்னி ஆகியவற்றில் பிரயோகப்படுத்தி மீண்டும் அவற்றை ஆன்மாவுக்குள் ஈர்த்துக்கொள்ளவேண்டும்.
கல்லில் சிலைவடித்துக் கடவுளாகச் சித்தரித்து மந்திரங் கள்கூறி பிரார்த்தனை செய்வதற்கு இறைதத்துவம் என்று பெயர். மரத்தில் இறைவனை உருவமாகச் செய்து வழிபடு வதற்குத் தாவர தத்துவம் என்று பெயர். இதை விருக்ஷ தத்துவம் என்றும் கூறுவர். அக்னியில் இறைவனை வர்ணித்து. வணங்கு வதை யக்ஞ தத்துவம் என்பர். நீரில் இறைவனது சக்தியை நிலை நிறுத்தி வழிபட்டு உட்கொள்வதற்கு அமிர்த தத்துவம் என்று பெயர். இந்த அமிர்த தத்துவத்தை விஷ்ணு ஆலயங்களிலும், சில கணபதியின் தலங்களிலும் மட்டுமே கடைப்பிடிக் கின்றனர். இந்த நான்கு தத்துவங்களில் நீர் மட்டுமே நாம் உட்கொள்ளும் மந்திர நீரின்வழியாக ஆன்மாவிற்குள் கலந்து, நமக்கு ஒருவித தெய்வீக பலத்தை ஏற்படுத்திச் செயல்பட வைக்கிறது.
நீருக்கு, வான மண்டலத்திலிலிருந்து பூமியில் விழுந்து பயிர்கள் வளரச் செய்து உயிர்களைக் காப்பதால் அமிர்தம் என்ற புனிதப் பெயர் வந்தது. இதையே நம் சான்றோர்கள் "நீரின்றி அமையாது உலகு' என்று நீரின் அவசியத்தை உணர்த்தினர்.
வாசனை திரவியங்களோடு வில்வம், துளசியிட்டு நீரூற்றி "அமிர்த சஞ்சீவினி' மந்திரத்தை ஜெபம் செய்தால், மரணப்படுக்கையில் கிடப்பவர்கள்கூட எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பர். அதைப்போலவே ஆனைமுகனுக்குரிய அறுகம்புல்லிட்டு வழிபட்ட "அறுகாமிர்தம்' எனும் நீரை சதுர்த்தி, செவ்வாய்க் கிழமைகளில் உண்டுவந்தால், கடன் தொல்லையால் வாழ்க்கை மூழ்கிப்போகும் அளவுக்கு வந்து விட்டாலும் மீண்டுவந்துவிட முடியும் என்று சொல்லப்படு கிறது. இது கடன் தீர்வுக்கு மட்டுமல்ல; சத் சந்தான பிராப்தி என்ற அறிவுமிக்க குழந்தைப் பேற்றையும் தரும் சக்தியு டையது. பொதுவாக, கலசங் களில் நீரிட்டு மந்திர ஜெபம் செய்வதற்கு "அபிமந்த்ரணம்' செய்தல் எனவும்; உட்கொள் வதற்கு "ப்ராசனம்' என்றும் கூறுவர். ஆனைமுக அறுகா மிர்தம் பிள்ளையார் வழி பாட்டில் வரும் சிறந்த பூஜை விதி என்று அறியமுடிகிறது. அறுகின் ஆன்மிகச் சிறப்பு விதை போடாமலேயே காற்றின்மூலம் வந்து விழுந்து முளைத்து செழிப்புடன் வளரக் கூடியதுதான் இந்த அறுகு.
தன்னைப் பயன்படுத்து பவர்களுக்கு உடல்நலம், உள்ள நலம், வாழ்நாள் வெற்றி ஆகியவற்றை ஆனைமுகன் மூலமாகத் தந்துவிடுகிறது.
மகாகணபதியின் மகிமைமிகு பத்திரமாக விளங்கும் அறுகம் புல்லுக்கு "தூர்வா' என்று பெயர். இந்த தெய்வப்புல் பூமியிலிருந்து கிளம்பும்போது தலைநிமிர்ந்தபடி புறப்பட்டு, கொடிபோல் பரவி குருத்து கிளம்பி முளைத்தபடியே வளர்ந்து வரக்கூடியது. இதை எளிதாக ஒரு நிலப்பரப்பிலிருந்து அழித்துவிட முடியாது.
சிறந்த மூலிகையாகவும் உள்ளபடியால் மனிதனுக்கு ஏற்படுகிற விஷக்காய்ச்சலையும் போக்கிவிடும் குணம் கொண்டது அறுகம்புல்.
தவம், ஜெபம், நீண்டகால யோகநிஷ்டை கடைப்பிடித்தல் ஆகிய சாதனைகள் செய்யும் யோகிகளுக்கு அவர்களது மூலாதாரச் சக்கரத்தில் அதிகமான வெப்பம் உண்டாகும். அதைத் தணிப்பதற்கு அறுகம்புல்லைத்தான் "மூதண்ட கஷாயம்' என்ற பெயரில் அருந்துவார்கள்.
தாரம், துருக, செஞ்சந்தனம், வெண் அறுகம்புல், மஞ்சள்பொடி ஆகியவற்றைப் பொடிசெய்து நெய் கலந்து திலகம் வைத்துக்கொண்டால் தம்பதி அன்யோன்யம் ஏற்படும் எனவும்; வெண் அறுகு, மஞ்சள் பொடி, பச்சைக் கற்பூரம் பொடிசெய்து பசுநெய் கலந்து விநாயக மூலம் சொல்லிலி திகலமிட, வியாபாரத்தில் மக்கள் ஈர்ப்பு நிலை உருவாகும் என்றும் மூலிலிகை ரகசியங்களில் தகவல் உள்ளது.
விநாயகப் பெருமானுக்கு ஆனைமுக அறுகாமிர்தம் உள்ளதுபோல, நமது இந்து சமய பூஜாக்கிரமங்களில் இன்னும் சில அமிர்தங்களும் உள்ளன.
வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து மறுநாள் பாரணை செய்து விரதம் முடிக்கும்போது, மகாவிஷ்ணுவை நினைத்தபடி அகத்திக்கீரை, நெல்லிலிக்காய், சுண்டைக்காயை நசுக்கி, சுத்தமாக்கி, உருண்டைபோல் செய்து தொண்டையில் வைத்துக்கொண்டு, கோவிந்தன் நாமம் சொன்னபடி நீர் அருந்தி விழுங்குவார்கள். இதற்கு, "அமிர்த பிந்து' சாப்பிடுதல் என்று சொல்வழக்கம் உள்ளது.
சிவாலயத்தில் சிவலிங்கக் கருவறையிலிருந்து வெளியாகும் கோமுக நீரும், பல்வேறு அபிஷேக உதகங்களும், வருணஜெபம் செய்யப்பட்ட கலச நீரும், கும்பாபிஷேக காலத்தில் அருளப்படுகிற கும்பகலச நீரும், ஆற்றில் ஓடுகிற தூய்மையான நீரும், மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்திலும், ஆறுகளும் கடலும் சங்கமிக்கிற இடத்தில் உள்ள நீரும், அனைத்து தெய்வங்களது பிம்பங்களில் இருந்து வெளியாகிற அபிஷேக காலத்திய திரவிய நீரும் அமிர்தத்திற்கு ஒப்பான புனித நீரே என்று அனைவரும் உணர்தல் வேண்டும்.
அறுகாமிர்த பூஜையும் செய்முறையும் ஆனைமுக அறுகாமிர்தத்தைச் செய்யும் முறை எளியதாக இருப்பினும், பூஜைசெய்யும் முறையைத் தெளிவாக அறிதல் வேண்டும். செப்புக் கலசம் ஒன்றில் நூல் சுற்றி, சுத்தமான நீர்விட்டு ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், பச்சிலை, ஜடாமஞ்சி தூள்செய்து இட்டு, அறுகம்புல்லை அடர்த்தியாக நுனி மேலிருக்கும்படி வைத்து, பூ, பொட்டு வைத்து அலங்கரித்து, சதுர்த்தி, செவ்வாய்க்கிழமை, ஞாயிறு தினங்களில் நாள் விவரங்கள் சொல்லி சங்கல்பம் செய்து, மஞ்சள் பிள்ளையார் பூஜை, குருவந்தனம் செய்து, 21 நாமங்களைக் கொண்ட தூர்வாயுக்ம பூஜைக்கான நாமவளிகளை, இரண்டு அறுகுகளாக இட்டு அர்ச்சனை செய்தல் வேண்டும்.
ஓம் பாசாங்குச தராய நம;
ஓம் கணாதிபதயே நம;
ஓம் ஆகுவாகனாய நம;
ஓம் விநாயகாய நம;
ஓம் ஈசபுத்ராய நம;
ஓம் சர்வசித்திப்ரதாய நம;
ஓம் ஏகதந்தாய நம நம;
ஓம் இபவக்த்ராய நம;
ஓம் மூஷிக வாகனாய நம;
ஓம் கபில வர்ணாய நம;
ஓம் பிரம்மசாரிணே நம;
ஓம் மோதக ஹஸ்தாய நம;
ஓம் சுரஸ்ரேஷ்டாய நம;
ஓம் கஜாநநாய நம;
ஓம் கபித்த பலப்ரியாய நம;
ஓம் கஜமுகாய நம;
ஓம் சுப்ர ஸன்னாய நம;
ஓம் ஸ்வர்ண வர்ணாய நம;
ஓம் உமாபுத்ராய நம;
ஓம் ஸ்கந்தப்ரியாய நம;
ஓம் தூர்வா பத்ர ப்ரியாய நம;
கடன் நிவர்த்தி, உடல்நலம் பெறுதல், பிள்ளைகளின் அறிவு விருத்தி ஆகிய பலன்களுக்காக விசேட சங்கல்பத்தைச் செய்து,
"மம சிந்தித மனோரத அவாப்த்யர்த்தம்
ஜென்ம லாய அபிவிருத்யர்த்தம்
சர்வ ருணரோக நிவாரணார்த்தம்
வியாபாரஸ்தலே அதிசீக்ர
லக்ஷ்மீ கடாட்ச சித்யர்த்தம்'
என்று பிரார்த்தனை செய்து தூபதீப நிவேதன மங்கள ஆரத்தி செய்தல் வேண்டும். இதற்கு தியானமாக,
"ஓம் ஓம் ஓம் ஓம்கார ரூபம்
ஹிமக்ரி ருசிரம் உத்தகங்கா தரேசம்
த்ரைகுண்யா தீர்த்தலீலா ஹ்ருதயதி
மனஸா தேஜஸோ தாரவிருத்தி
யோகேந்ந்ரா ப்ரம்ம தந்த்ரி: ஸகல
குணமயம் ஸ்ரீ ஹரேந்த்ரம் ஸுஸக்ஞா:
கம்: கம்: கம்: கணபதி மபிஷம்:
வ்யாபகம் சிந்த யந்தீ'
என்று சொல்லவேண்டும்.
அறுகால் மனமுருகும் ஆனைமுகன்
இவருடைய அருளை விரைவாகப் பெறுவ தற்கு ஆடி, தை, வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அங்க சுத்தம் செய்துகொண்டபிறகு, சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அறுகு, செம்பருத்தி, செவ்வரளிப் பூக்களிட்டு பூஜைசெய்து, தலைவாழை இலைமேல் நெல்லைப் பரப்பி அதன்மேல் கொழுக்கட்டை வைத்து வழிபட்டால் விரைவாகச் செல்வச் சேர்க்கை ஏற்பட்டதாகச் செய்தி உள்ளது. சூரிய உதயத் திற்கு முன்பாக இந்த பூஜையை நிறைவு செய்து அறுகு நீர் அருந்துதல் வேண்டும்.
கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை அறுகம்புல்லிலில் எழுந் தருளச் செய்து மந்திர சாஸ்திர விதிப்படி பூஜை நடத்துவதும், அதே மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் ஒருபொழுது விரதமிருந்து கணபதிக்கு அறுகு சமர்ப்பித்து பூஜை நடத்திப் பிரார்த்தனை செய்வதற்கு விநாயக சஷ்டி விரதம் என்று பெயர். "சஷ்டி தொட்டு சதயம் விட்டு' என்ற பழமொழி இந்த கணேச விரதத் திற்கு உரியது. தூர்வா என்ற அறுகம்புல்லால் கணேசரை வழிபடுகிற தூர்வாஷ்டமி விரதம் ஆவணிமாத வளர்பிறை அஷ்டமி திதியில் வருகிறது.
எங்கும் பரவியிருக்கும் பிள்ளையார் வழிபாட்டில், நீர் அறுகுடன் சேர்ந்து அறுகாமிர்தமாக மாறி, நம் கடன்களை அகற்றி ஆன்மாவையும் சுத்தப்படுத்துகிறது- ஆனைமுக அறுகாமிர்தம்!
செல்: 91765 39026