Advertisment

அமீர், பன்னீர்செல்வம், லிங்குசாமி, சுதா கொங்கரா, காளைமாடு மேட்டர்ஸ்!

/idhalgal/cinikkuttu/amir-panneerselvam-lingusamy-sudha-konkara-kalematters-matters

டைரக்டர் அமீர் ஹீரோவாக நடிக்கும் "பேரன்பு கொண்ட பெரியோர்களே' படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறித்தார் ஆதம் பாவா. அமீரின் உதவியாளர் சந்திரன்தான் டைரக்டர். படத்தை எப்ப ஆரம்பிக்கலாம் என தயாரிப்பாளர் கேட்டால், ""எலெக்ஷன் டயத்துல எடுத்து ரிலீஸ் பண்ணுனா படம் சூப்பரா

டைரக்டர் அமீர் ஹீரோவாக நடிக்கும் "பேரன்பு கொண்ட பெரியோர்களே' படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறித்தார் ஆதம் பாவா. அமீரின் உதவியாளர் சந்திரன்தான் டைரக்டர். படத்தை எப்ப ஆரம்பிக்கலாம் என தயாரிப்பாளர் கேட்டால், ""எலெக்ஷன் டயத்துல எடுத்து ரிலீஸ் பண்ணுனா படம் சூப்பரா ஓடும்'' என்கிறாராம் அமீர். ""எப்ப எலெக்ஷன் வர்றது? எப்ப நான் படத்தை ஆரம்பிக்கிறது''ன்னு புலம்புகிறாராம் தயாரிப்பாளர் ஆதம்பாவா.

Advertisment

surya

டைரக்டர் லிங்குசாமியிடம் அசோஸியேட்டாக இருந்து "ரேணிகுண்டா' மூலம் டைரக்டராக புரொமோஷன் ஆனவர் பன்னீர்செல்வம். இவரின் டைரக்ஷனில் விஜய்சேதுபதி- தான்யா ரவிச்சந்திரன் ஜோடி போட்ட "கருப்பன்' சமீபத்தில் ரிலீசானது.

டைரக்டராக ஆகிவிட்டாலும் தனது குரு லிங்குசாமிமீது வைத்துள்ள மரியாதையாலும் பாசத்தாலும் "சண்டக்கோழி-2'-வில் அசோஸியேட்டாக வேலை பார்க்கிறாராம் பன்னீர்செல்வம். ஏன்னா "சண்டக்கோழி-2' ஜல்லிக்கட்டு காட்சியில் "கருப்பன்' படத்தில் நடித்த காளை நடிக்கிறதாம். அந்தக் காளையுடன் பன்னீர்செல்வம் நன்றாகப் பழகியதால் லிங்குவின் அன்பு அழைப்பிற்கிணங்க அசோஸியேட்டாக வேலை செய்கிறாராம்.

Advertisment

ameer

இப்போது கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் நடித்துவரும் சூர்யா, அடுத்ததாக "இறுதிச்சுற்று' சுதா கொங்கரா டைரக்ஷனில் நடிக்கவிருக்கிறார். இதற்கான கதை டிஸ்கஷன் ஸ்பீடாகப் போய்க் கொண்டிருக்கிறதாம். மதுரை ஏரியா கதை என்பதால், பெரும்பாலான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுகளை அந்த ஏரியாவிலிருந்தே செலக்ட் பண்ணப் போகிறாராம் கொங்கரா.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe