லேசியாவில் நடக்கவிருந்த கலைநிகழ்ச்சிக்கு 2018 பிப்ரவரி 3-ஆம் தேதி, சென்னை தியாகராய நகரிலுள்ள டான்ஸ் ஸ்கூலில் ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தார் அமலாபால். பிரபல டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருக்குச் சொந்தமானது தான் அந்த ஸ்கூல். டைரக்டர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்தபிறகு சினிமாவிலும் கலை நிகழ்ச்சிகளிலும் வீக்எண்ட் பார்ட்டிகளிலும் செம பிஸியானார் அமலாபால்.

Advertisment

amalapaldancemaster

சென்னையிலும் கேரளாவிலும் சொந்த வீடு இருந்தாலும், சிலபல கமுக்கமான கசமுசா சங்கதிகளுக்காக பட்டினப் பாக்கத்தில் உள்ள சோமர்செட் ஓட்டல்தான் அமலாபாலுக்கு வசதியாக இருந்தது, இப்போதும் இருக்கிறது. அந்த ஓட்டலின் பாருக்கு வாரத்தின் இறுதி நாட்களில் செல்வார் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். அந்த அடிப்படையில் அமலாபாலும் அவரும் திக் ஃப்ரண்ட்ஸ் ஆனார்கள்.

Advertisment

alagesanஅந்த நெருக்கத்தின் அடிப்படையில்தான் ஸ்ரீதரின் டான்ஸ் ஸ்கூலில் ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தார் அமலாபால். அப்போது அங்குவந்த சென்னை கானாத்தூரைச் சேர்ந்த அழகேசன் என்பவர், ""மலேசியா புரோக்கிராம் முடிந்ததும் என்னோட தொழிலதிபர் நண்பருடன் தனிமையில் டின்னர் சாப்பிட முடியுமா? எத்தனை லட்சம் வேணும் கேளுங்க'' என கொக்கியைப் போட்டதும் ஆவேசமான அமலாபால் காச்மூச்சென கத்திக் கூப்பாடு போட்டு, மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் அழகேசன்மீது கம்ப்ளெய்ண்ட்டும் பண்ணினார்.

சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கிய தி.நகர் போலீஸ், அழகேசனைத் தூக்கிவந்து விசாரித்து, கேஸ் போட்டு புழல் ஜெயிலுக்கும் அனுப்பியது. இந்த வில்லங்க விவகாரத்தை 2018 பிப்.13 தேதியிட்ட "சினிக்கூத்து' இதழிலேயே எழுதியிருந்தோம். அழகேசன் ஜாமீனில் வந்துவிட்டாலும், அமலாபால் கொடுத்த கம்ப்ளெய்ண்ட் பிரகாரம், விசாரித்துக் கொண்டிருக்கிறது போலீஸ். சமீபத்தில் பாட்ஷா என்பவனை தூக்கிவந்து விசாரித்தனர் போலீசார்.

Advertisment

அப்போது அவன் கொடுத்த தகவலின் பேரில், "மேட்டர்' மேட்டருக்கு மெயின் காரணமே டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்தான் என்பதை கன்ஃபார்ம் பண்ணிய போலீஸ், ஸ்ரீதரையும் தூக்கிவந்து விசாரித்துள்ளது. டான்ஸ் மாஸ்டர் கக்கிய ரகசிய சங்கதிகளைக் கேட்டு ஆடிப் போய்விட்டதாம் போலீஸ். இந்த விசாரணை வில்லங்கத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. ஸ்ரீதரிடம் விசாரணை நடத்திய விவகாரம், சம்பந்தப்பட்ட அந்த உயர் அதிகாரியைத் தவிர, ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கே தெரியாதாம். ஏன்னா அந்த உயர் அதிகாரி அமலாபாலுக்கு ரொம்பவும் நெருக்கமாம்.

-பரமு & அரவிந்த்