செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், "அதோ அந்த பறவைபோல.' அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ளார்.
கேரளா, கர்நாடக எல்லையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிவருகிறது, இளம்தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்தி த்ரில்லர் படமாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amalabal_9.jpg)
இந்தப் படத்தில் மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஐ.பி.எல் வர்ணனையாளரும், "ஜனத்', "ஹவுஸ்ஃபுல்- 3', "டேஞ்சரஸ்', "ஐசக்' உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் அமலாபாலுக்கு நெருக்கமானவராக நடித்திருக்கிறார். பிரவீன் என்கிற குழந்தை நட்சத்திரம் அறிமுகமாகிறார்.
இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கியுள்ளார் "தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி யவர். சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருக்கிறார். வினோத் பேசும்போது, ""படத்தின் பெரும்பகுதி வனப்பகுதிகளில் உருவாவதால், அங்குள்ள பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள, குழுவாகத் திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டியிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலக் காடுகளில் படத்தை உருவாக்குவது எங்களுக்கு சாதகமாக இருந்தது. உயர்ந்த மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் அமலாபால் நடித்துள்ளார்.
பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக்குழுவுக்கு அமலாபால் ஒத்துழைப்பு அளித்ததும் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு, படம் சிறப்பானதாக உருவாக முக்கியமான காரணம்'' என்றார்.
ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பு: இரா. குமரேசன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-11/amalabal-t_1.jpg)