Advertisment

அமலாபாலும் தொழிலதிபரும் கசமுசாவும்!

/idhalgal/cinikkuttu/amalaapaalauma-taolailataiparauma-kacamaucaavauma

amalabal

Advertisment

டைரக்டர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து பண்ணியதிலிலிருந்து ஃப்ரீ பேர்டாக மாறிவிட்டார் அமலாபால். "திருட்டுப்பயலே-2'-க்குப் பிறகு ஒன்றிரண்டு பட வாய்ப்புகளும் வருகின்றன. இந்த நேரத்துலதான் கார் புரோக்கர் ஒருவரின் ஐடியாப்படி பாண்டிச்சேரியில் டூப்ளிகேட் அட்ரஸ் கொடுத்து வெளிநாட்டுக் கார் ஒன்றை வாங்கிய வகையில் வரிஏய்ப்பு செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு அமலாபால்மீது பாய்ந்தது.

பாண்டிச்சேரியிலுள்ள வருமானவரித்துறை அலுவல கத்தில் விசார ணைக்கு ஆஜராகு மாறு அமலா பாலுக்கு சம்மன் அனுப்பப் பட்டது. விசார ணைக்குப் போன அமலா பாலை அரெஸ்ட் பண்ணி, உடனே ஜாமீனிலும் விட்டு விட்டார்கள். அமலா ப

amalabal

Advertisment

டைரக்டர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து பண்ணியதிலிலிருந்து ஃப்ரீ பேர்டாக மாறிவிட்டார் அமலாபால். "திருட்டுப்பயலே-2'-க்குப் பிறகு ஒன்றிரண்டு பட வாய்ப்புகளும் வருகின்றன. இந்த நேரத்துலதான் கார் புரோக்கர் ஒருவரின் ஐடியாப்படி பாண்டிச்சேரியில் டூப்ளிகேட் அட்ரஸ் கொடுத்து வெளிநாட்டுக் கார் ஒன்றை வாங்கிய வகையில் வரிஏய்ப்பு செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு அமலாபால்மீது பாய்ந்தது.

பாண்டிச்சேரியிலுள்ள வருமானவரித்துறை அலுவல கத்தில் விசார ணைக்கு ஆஜராகு மாறு அமலா பாலுக்கு சம்மன் அனுப்பப் பட்டது. விசார ணைக்குப் போன அமலா பாலை அரெஸ்ட் பண்ணி, உடனே ஜாமீனிலும் விட்டு விட்டார்கள். அமலா பால் கைது என மீடியாக்கள் தெறிக்கவிட்டன.

amalabal

Advertisment

இப்படியாப்பட்ட நேரத்துலதான், கடந்த 31-ஆம் தேதி சென்னை மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் ஒரு பெண்மணி மற்றும் தனது பி.ஆர்.ஓ.வுடன் வந்தார் அமலா பால்.

""சென்னை தி.நகர் மன்னார் தெருவில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் டான்ஸ் ஸ்கூல் இருக்கிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி மலேசியாவில் நடக்கும் கலைநிகழ்ச்சிக்கு டான்ஸ் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்குவந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் "மலேசியா புரோக்கிராம் முடிந்ததும், அங்குள்ள எனது நண்பரான தொழிலதிபர் ஒருவருடன் இரவு விருந்தில் கலந்து கொள்ளமுடியுமா? எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத்தயாராக இருக்கிறார்' எனக் கேட்டதும் ""செருப்பால் அடிப்பேன்'' என அவரைத் துரத்திவிட்டேன். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என இன்ஸ்பெக்டர் சேகரிடம் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தார். உடனே அலெர்ட்டான போலீசார், அழகேசனைத் தூக்கிக்கொண்டுவந்து ஸ்டேஷனில் உட்காரவைத்து விடியவிடியவும் விடிந்த பின்னும் விசாரித்தனர்.

amalabal1a

""என்னய்யா மனுஷன் அந்த அழகேசன்? நடிகைன்னா அவ்வளவு எளக்காரமாப் போச்சா?'' என நமது சினிமா நண்பர் ஒருவரிடம் அங்கலாய்த்தோம். ""அட நீங்க வேற -இந்த மேட்டருக்குப் பின்னால எவ்வளவு கசமுசா சங்கதிகள் இருக்கு தெரியுமா?'' என ஆரம்பித்து அமலா பாலில்-தொழிலதிபர் ரகசியத்தைச் சொல்லத் தொடங்கினார்.

""டைரக்டர் ஏ.எல். விஜய் யிடமிருந்து டைவர்ஸ் வாங்குனதுக்கப்புறம், சென்னைப் பட்டினப்பாக்கத் தில் இருக்கும் சோமர்செட் ஓட்டலில்லதான் பெர்மனெண்டா தங்கியிருக்காரு அமலாபால். அந்த ஓட்டலுக்கு டின்னர் சாப்பிட, டிரிங்ஸ் சாப்பிட போற ஆளுங்க எல்லாமே பிக்ஷாட்டுகள்தான். அந்தமாதிரி பிக்ஷாட்தான் மலேசியாவைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவர்.

alagasen

அந்த ஓட்டலிலில் தங்கி யிருக்கும் அமலாபாலைச் சந்தித்து மலேசியா புரோக் கிராமுக்கு பேசி முடிச்சார் இப்ராஹிம். இப்ப அமலா பால் கைகாட்டியிருக்கும் கானாத்தூரைச் சேர்ந்த அழகேசனுக்கு இப்ராஹிமை நல்லாவே தெரியும். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரும் அந்த ஓட்டலுக்குப் போகக்கூடிய ஆளுதான். அந்த லிலிங்குலதான் அமலாபால் ரிகர்சல் பார்த்த ஸ்ரீதரின் டான்ஸ் ஸ்கூலுக்குப் போயிருக்கார் அழகேசன். எந்த ஏப்ப சாப்பையாவது அங்கே போகமுடியுமா? பேசவேண்டிய ஆளு மூலமா, பேசவேண்டிய முறையில பேசியிருந்தா எல்லாம் ஓ.கே. ஆகியிருக்கும். ஆர்வக் கோளாறுல பப்பளப் பான்னு பப்ளிக்கா கேட்டதுனாலதான் ஆவேசமாயிட்டாரு அமலாபால்.

ரெண்டாவது பாண்டிச்சேரியில கைதுன்னு நியூஸ் வந்துச்சுல்ல. என்னை யாரும் கைது பண்ணல, நான் தில்லா வெளியில தான் இருக்கேன்னு காட்டுறதுக்கு அமலா பால் போட்ட சூப்பர் டிராமா'' என ஓப்பனாகவே போட்டுத் தாக்கினார் நமது சினிமா நண்பர்.

-பரமேஷ்,

அரவிந்த்

படங்கள்: அசோக்

இதையும் படியுங்கள்
Subscribe