டை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Advertisment

நடிகை ரம்யா

""ஒரு தொகுப்பாளினியான என்மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி.

Advertisment

dd

"மைனா' படத்திலிருந்தே அமலா பாலுடன்

எனக்கு நெருக்கமாக நட்பு உள்ளது. இடையில் சிறிது இடைவெளி இருந்தது. இப்படம்மூலம் மீண்டும் எங்கள் நட்பு தொடர்கிறது. இப்படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தியாவிலேயே அமலாபால் மாதிரி தைரியமாக யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான். மகளிரைக் கொண்டாடும் மாதமிது.''

"ஆடை'யின் இயக்குநர் ரத்னகுமார்

""அமலா பாலுக்குப் பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றிப் பேசும் படமாக இருக்காது.''

ஹீரோயின் அமலாபால்

""படம் நடிப்ப தையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் "ஆடை' படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப் பிடிப்பு ஆரம்பிக்கும் போது ஒரு சிறு தயக்கம் இருந்தது.

ரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு சிறந்த நடிகை கிடைத்து விட்டார்.

முதல் நாள் படப் பிடிப்பில் நான் நினைத் தேன், எனக்குப் பாதுகாப்பு இருக்குமா என்று. ஏனென்றால், ஒளிப்பதிவாளர் களையும் சேர்த்து 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள்.''